BSNL SIM காட்டில் மழை.. 30 நாட்கள் இல்ல.. 35 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card) வாங்கும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலையிலேயே 35 நாட்கள் வேலிடிட்டி (35 Days Validity) கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ்களையும் கொடுக்கிறது.
இந்த திட்டம் ஒட்டுமொத்த ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கும் பொருந்தாது. புதிதாக பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கி ரீசார்ஜ் செய்ய இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, ஏற்கனவே பிஎஸ்என்எல் சிம் கார்டு இருந்தால், இந்த திட்டத்துக்கு பதிலாக மற்றொரு திட்டம் இருக்கிறது. அதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.249 திட்ட விவரங்கள் (BSNL Rs 249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 35 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) அனைத்து நெட்வொர்க்குக்கும் செய்து கொள்ளலாம்.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. அதேநேரத்தில் 2 ஜிபி டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 35 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 70 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும், 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.
இதுபோக நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். பிஎஸ்என்எல் சிம் கார்டை புதிதாக வாங்கி இருக்கும் கஸ்டமர்கள், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பழைய கஸ்டமர்களாக இருந்தால், ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் என்னென்ன கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.247 திட்ட விவரங்கள் (BSNL Rs 247 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். ஆனால், முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே தினசரிக்கு டேட்டா கிடைக்காது.
மொத்தமாக கொடுக்கப்படும். அப்படி 50 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த லம்ப்-சம் டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். ஆனால், எஸ்எம்எஸ்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கிலேயே 30 நாட்கள் முழுவதும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதில் கூடுதல் சலுகையாக ரூ.10 மதிப்பில் டாக்டைம் வேல்யூ கொடுக்கப்படுகிறது. இதைவிட அதிக டேட்டா கொண்ட திட்டம் வேண்டுமானால், 30 நாட்கள் வேலிடிட்டியுடன் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தையும் பிஎஸ்என்எல் நிறுவனம் வைத்துள்ளது. கூடுதலாக 3 ஜிபி ப்ரீ டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.299 திட்ட விவரங்கள் (BSNL Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை 30 நாட்களுக்கு கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஆகவே, மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
3 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இதுபோக பிஎஸ்என்எல் செல்ப் கேர் ஆப் வழியாக ரீசார்ஜ் செய்தால் 3 ஜிபி இலவச டேட்டாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இது ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications