BSNL-க்கு மாறிய கஸ்டமர்கள்! இதை விட்றாதீங்க.. பழைய கஸ்டமர்கள் கொடுத்த அட்வைஸ்.. பொசுக்குனு இப்படி சொல்லிடீங்க!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயரத்திய பிறகு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல மற்ற சிம் கார்டுகளில் இருந்து போர்ட் செய்யும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இப்படி வரும் புதிய கஸ்டமர்களுக்கு நச்சுனு பழைய கஸ்டமர்கள் அட்வைஸ் கொடுத்து இருக்கின்றனர். இதுகுறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெலிகாம் (Telecom) கட்டணங்கள் உயர்த்தப்பட்டது வழக்ககமானதுதான் என்றாலும், இந்த முறை கஸ்டமர்கள் வழக்கமாக இருக்கவில்லை. எந்த நிறுவனத்தில் மலிவான விலையில் திட்டங்கள் கிடைக்கிறதோ அந்த நிறுவனத்துக்கு மாறுவோம் என்ற மனநிலைக்கு சென்றுவிட்டனர். இதனாலேயே பிஎஸ்என்எல் பக்கம் அவர்களின் மொத்த கவனமும் சென்றுள்ளது.

பழைய பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், கஸ்டமர்களின் வருகையால், அதிவிரைவில் 4ஜி சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் 4ஜி சேவை கிடைக்கிறது. அடுத்த சில மாதங்களில் பெரும்பாலான மாநிலங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை (BSNL 4G Service) கிடைக்க இருக்கிறது.
இந்த நேரத்தில் புதிதாக பிஎஸ்என்எல்லுக்கு மாறும் கஸ்டமர்கள் எந்தெந்த ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம் என்ற அட்வைஸ் சோஷியல் மீடியாக்களில் பழைய கஸ்டமர்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. அதேபோல செய்தி நிறுவனங்களும் பிஎஸ்என்எல் திட்டங்களை அலசி ஆராய்ந்து செய்திகள் வெளியிட தொடங்கிவிட்டன. இதனடிப்படையில் பெரும்பாலான கஸ்டமர்களை ஒரு திட்டம் கவர்ந்திருக்கிறது.
அதாவது, ரூ 249 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டமே அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மற்ற நிறுவனங்களை போல் 28 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்றில்லாமல் 45 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 249 திட்ட விவரங்கள் (BSNL Rs 249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி(STD) மற்றும் நேஷனல் ரோமிங் (National Roaming) வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடியும். இந்த 2 ஜிபிக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) சலுகையின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு முன்பு சொன்னதை போலவே 45 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலையில் அதிகப்படியான டேட்டா சலுகையுடன் அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை கொண்ட திட்டமாக இது இருக்கிறது. இதனாலேயே அதிகப்படியான கஸ்டமர்கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.
இதைவிட மலிவான விலையில் நல்ல ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ரூ 153 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்லலாம். இந்த திட்டத்தில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
அதேபோல 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். இதுபோக பிஎஸ்என்எல் டியூன்ஸ், ஹார்டி கேம்ஸ், அரினா கேம்ஸ், லிட்சன் பாட்காஸ்ட், ஜிங்க் மியூசிக் மற்றும் வாவ் எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் சலுகையும் கிடைக்கிறது. 26 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications








