BSNL சிம் இருக்கா.. மலிவு விலையில் ஒரே ரீசார்ஜ் 40 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களை விட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதேபோல் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகள் மற்றும் மலிவு விலையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல். எனவே தான் இந்நிறுவனத்தின் திட் டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்குகின்றன. அதாவது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் தான் அதிக வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 40 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது குறிப்பாக இதுபோன்ற திட்டம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இல்லை. ஒருவேளை இதை விட அதிக வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.599 மற்றும் 997 ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்வது நல்லது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். குறிப்பாக கம்மி பட்ஜெட்டில் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்குவதால் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில்70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது அதிக டேட்டா வேண்டும் என நினைக்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








