Home
News

Jio, Airtel தலையில் இடி.. ரூ.249-க்கு BSNL இறக்கிய திட்டம்.. குவிந்த 38 லட்சம் கஸ்டமர்கள்.. சொல்லியடிதான் போல!

ரீசார்ஜ் கட்டண விலையை ஏத்துனதும் போதும், படுறபாடும் போதும் என்று ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்கள் திக்குமுக்காடும்படி பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பழைய கஸ்டமர்களை தக்க வைக்க ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைள் மற்றும் கேஷ்பேக் போன்ற யுக்திகளை ஜியோ, ஏர்டெல் கையில் எடுக்க திட்டமிட்டிருக்கும் நேரத்தில் மேலுமொரு இடியான சம்பவத்தை பிஎஸ்என்எல் செய்துள்ளது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை ஜூலை 3ஆம் தேதி கட்டண உயர்வை கொண்டு வந்தன. அப்போதில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதுவரையில் காணாத சிம் கார்டு விற்பனை மற்றும் சிம் போர்ட் செய்யும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Jio, Airtel தலையில் இடி.. ரூ.249-க்கு BSNL இறக்கிய திட்டம்.. குவியுது!

சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமாக பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் விற்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த சேவைகளுக்கான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்களை பார்த்தால், அடிமட்ட விலைக்கு இருக்கின்றன. இதனாலேயே பிஎஸ்என்எல்லுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இப்படிப்பட்ட நேரத்தில் 38.93 லட்சம் பிராட்பேண்ட் கஸ்டமர்களை பிஎஸ்என்எல் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி எட்டி இருக்கிறது. இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கனவிலும் நினைக்காகபடி வெறும் ரூ.249 விலையில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள் கிடைக்கின்றன.

இதில் டேட்டா மட்டுமல்லாமல், லேண்ட்லைன் வாய்ஸ் கால்களும் வருகின்றன. சொல்லப்போனால், தொலைத்தூரப்பகுதிகளில் இருக்கும் கிராமங்கள் மற்றும் மலை பிரதேசங்களில் பிராட்பேண்ட் இன்டர்நெட்டை எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இந்த திட்டங்களை லாபம் பார்க்காமல் கொடுத்து வருகிறது. ஜியோ, ஏர்டெல் சேவைகள் கிடைக்காத பகுதிகளும் இந்த சேவை கிடைக்கும்.

இதனாலேயே பிஎஸ்என்எல் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு அடுத்தபடியாக பிராட்பேண்ட் சேவைக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு மேலுமொரு அடியாக விழுந்துள்ளது. இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களில் அப்படியென்ன இருக்கிறது என்பதை சலுகைகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 249 திட்ட விவரங்கள் (BSNL Rs 249 Plan Details): இதுவொரு பேசிக் பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் 25 எம்பிபிஎஸ் டேட்டா கிடைக்கிறது. அதேபோல 2 எம்பிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக லேண்ட்லைன் சலுகை கிடைக்கிறது. ஆகவே, லோக்கல் (Local), எஸ்டிடி கால்களை (STD Calls) செய்து கொள்ளலாம்.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் சேவை கிடைக்காத பகுதிகளிலும் இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஆகவே, மலிவான விலையில் குறைந்தபட்ச டேட்டா கொண்ட பிராட்பேண்ட் சேவை வேண்டுமானால், இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். அதுவே அதிகப்படியான டேட்டா வேண்டுமானால், வெறும் ரூ.90 அதிகமாக கொடுத்தால் போதும்.

பிஎஸ்என்எல் ரூ 329 திட்ட விவரங்கள் (BSNL Rs 329 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் (Brodband Plan) 25 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும். அதிபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை கொடுக்கப்படும்,

இதுபோக அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். வெறும் ரூ.329 விலைக்கு 1000 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை என்பது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு லாபம் தரக்கூடியாத திட்டமாகும். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல் வைத்திருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 249 Plan Offers Unlimited Voice Calls 25Mbps Speed Amid 38 Lakh Connections By April 30 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X