BSNL சிம் குடுங்கப்பா.. ரூ.249 க்கு 35 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் சிம் கார்டு இருந்தால் போதும் போலயே என்று சொல்லும்படி மலிவான விலைக்கு ரீசார்ஜ் திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. மற்ற நிறுவனங்களில் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் கிடைக்கும் விலையைவிட மலிவான விலைக்கு இதில் 35 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த மலிவு விலை திட்டம் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கிய பிறகு முதல்முறை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆகவே, ஏற்கனவே இருக்கும் பிஎஸ்என்எல் சிம் கார்டு கஸ்டமர்களுக்கு கிடைக்காது. ஏனென்றால், இந்த திட்டம் அவ்வளவு மலிவான விலைக்கு அதிக சலுகைகளை கொடுக்கிறது. இந்த சலுகைகளை பார்த்தால் உங்களுக்கே புரிய வரும்.

பிஎஸ்என்எல் ரூ.249 திட்ட விவரங்கள் (BSNL Rs 249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 35 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் தினமும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 35 நாட்களுக்கு மொத்தமாக 70 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் 4ஜி டேட்டா சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு 4ஜி வேகத்திலேயே இந்த 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு அடுத்து வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) கொடுக்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ்கள் தினமும் அனுப்ப கொடுக்கப்படும்.
இந்த சலுகைகளை 35 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல புதிய சிம் கார்டு வாங்கிய கஸ்டமர்களுக்கு ரூ.1 விலை கொண்ட திட்டமும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். அதேபோல ஒரு முறை மட்டுமே இதை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த திட்டம் எப்போதும் கிடைக்காது, குறிப்பிட்ட தேதி வரையில் மட்டுமே கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.1 திட்ட விவரங்கள் (BSNL Rs.1 Plan Details): இந்த திட்டமும் புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது, இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கியவுடன் இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த 1 ரூபாய் விலைக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதிலும் 30 நாட்களுக்கு கிடைக்கிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கொடுக்கப்பட்டுவிடும். மேலும், ஒவ்வொரு நாளுக்கும் 2 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது.
30 நாட்களுக்கு 60 ஜிபி டேட்டா கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றை புதிய பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் (New BSNL Customers) தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இந்த திட்டங்கள் ஒட்டுமொத்த சர்க்கிள்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








