Home
News

Jio, Airtel, Vi SIM பத்திரம்.. ரொம்ப கம்மி விலைக்கு 35 நாள் ரீசார்ஜ்.. BSNL ஒரு முடிவோட தான் இருக்கு போல!

இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஆனது, முடிந்த அளவிற்கு புதிய கஸ்டமர்களை தன்பக்கம் ஈர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது போல் தெரிகிறது. ரூ.51-ஐ தொடர்ந்து ரூ.249 எப்ஆர்சி ரீசார்ஜை (FRC Recharge) வழங்குகிறது.

இவ்விரு திட்டங்களுமே - ஏற்கனவே ஜியோ, ஏர்டெல் மற்றும் வி சேவையின் கீழ் உள்ள, அந்தந்த நெட்வொர்க்கை விரும்பாத வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கின்றன என்றே கூறலாம். புதிய பயனர்களுக்கான பிஎஸ்என்எல் ரூ.249 எப்ஆர்சி திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

BSNL.. ரொம்ப கம்மி விலைக்கு 35 நாள் ரீசார்ஜ்!

பெயர் குறிப்பிடுவது போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 மதிப்பிலான 'முதல் ரீசார்ஜ் கூப்பன்' (first recharge coupon) திட்டமானது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமான திட்டமாகும். பிஎஸ்என்எல் இந்த ரூ.249 திட்டம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கிறது என்பது கூடுதல் சுவாரசியம்.

புதிய பயனர்களுக்கான பிஎஸ்என்எல் ரூ.249 எப்ஆர்சி திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ.249 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited voice calling), தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB Data) ஆகிய நன்மைகள் வழங்கப்படுகின்றன.

இதன் கீழ், இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த வரம்பற்ற வாய்ஸ் கால் வசதி கிடைக்கிறது. மேலும் எப்யுபி என்கிற நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் (FUP) வரம்பிற்குட்பட்ட டேட்டா தீர்ந்த பிறகு (அதாவது டெய்லி 2ஜிபி டேட்டா தீர்ந்த பின்னர்), இண்டர்நெட் ஸ்பீட் ஆனது வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். முன்னரே குறிப்பிட்டபடி இத்திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்கள் ஆகும்.

மீண்டும் ஒருமுறை - ரூ.249 திட்டத்தை புதிய பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது, ஒரு சிம் (SIM) கார்டில் செய்யப்படும் முதல் ரீசார்ஜ் இதுவாகத்தான் இருக்க வேண்டும்; அதன் பிறகு, இப்பயனருக்கு இத்திட்டம் கிடைக்காது. இருப்பினும், நீங்கள் மற்றொரு புதிய சிம் கார்டை பெற்றால், மீண்டும் ஒரு 'முதல் ரீசார்ஜ் கூப்பன்' (FRC) மூலம் இதே திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை இதேபோன்ற திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால் நீங்கள் ரூ. 225 திட்டத்தை தேர்வு செய்யலாம்.

ரூ.225 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2.5ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும். இத்திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். எப்யுபி வரம்பிற்குட்பட்ட டேட்டா தீர்ந்த பிறகு, இண்டர்னெட் ஸ்பீட் 40 Kbps ஆக குறைகிறது.

இவ்விரு திட்டங்களின் விலைகளும் ஏறக்குறைய ஒரே அளவில் உள்ளன; மேலும், பயனர்களுக்குத் தேவையான கணிசமான அளவு டேட்டா மற்றும் அடிப்படை சேவைகளை இவை வழங்குகின்றன. ஆனால் ரூ.249-ஐ போல ரூ.225 திட்டம் ஒரு எப்ஆர்சி திட்டம் அல்ல; அதாவது, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள பழைய அல்லது புதிய வாடிக்கையாளர் என யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம்.

விரைவில் பிஎஸ்என்எல் திட்டங்களின் விலைகள் உயருமா? பிஎஸ்என்எல் எப்போதுமே நேரடி கட்டண உயர்வுகளை தவிர்த்து வந்துள்ளது. ஜியோ, ஏர்டெல் , வோடாபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது தங்கள் திட்டங்கள் அனைத்திலும் கட்டணங்களை உயர்த்தும் சுழற்சிகளை கொண்டிருக்கும் வேளையில், பிஎஸ்என்எல் அதை செய்வதற்கு ஒரு வித்தியாசமான வழியை கொண்டுள்ளது.

இந்நிறுவனம், கட்டணங்களை நேரடியாக உயர்த்தி, அதன் பலன்களை அப்படியே வைத்திருப்பதற்கு பதிலாக, காலப்போக்கில் பல திட்டங்களின் பலன்களை குறைப்பதன் மூலம் மறைமுகமாக கட்டணங்களை உயர்த்துகிறது. இது பொதுவாக, பயனர்கள் தாங்கள் சேவைகளுக்கு அதே தொகையை செலுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 249 FRC Recharge With 2GB Daily Data SMS Unlimited Voice Call For 35 Days Plan Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X