BSNL ரீசார்ஜ் பிச்சிக்குது.. வெறும் ரூ.247 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 50 ஜிபி டேட்டா.. ரூ.10 டாக்டைம்!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்கள் ரூ.300-க்குள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், அவர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அடங்கிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) பக்காவாக களமிறக்கப்பட்டு இருக்கிறது. டேட்டாவுக்கு ஏற்ப 30 நாட்கள் முதல் 65 நாட்கள் வரையில் வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எந்த திட்டம் உங்களுக்கானது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பிஎஸ்என்எல் ரூ 247 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 247 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் டாக்டைம் சலுகையுடன் கிடைக்கிறது. அதாவது, வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், கூடுதல் சலுகையாக உங்களுக்கு டாக்டைம் கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு ரூ.10 டாக்டைம் பெற்று கொள்ளலாம். 30 நாட்கள் வேலிட்டி கிடைக்கிறது.

இந்த 30 நாட்களில் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அனைத்து நெட்வொரக்கிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பெற்று கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் மாதம் முழுவதும் தினசரி வரம்பில் அனுப்பி கொள்ளலாம். இப்போது டேட்டாவுக்கு வருவோம். இதில் 50 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இதுவொரு லம்ப்-சம் சலுகையாக இருந்தாலும், அந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, உங்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபிக்கும் மேல் டேட்டா கிடைக்கிறது. இதே வேலிடிட்டியில் தினசரி டேட்டா வேண்டுமானால், ரூ 299 விலைக்கு மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 Prepaid Plan): இந்த திட்டத்தில் முந்தைய திட்டத்தைவிட அதிமான டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆனால், தினசரி வரம்பில் பயன்படுத்த கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி வருவதால் 60 ஜிபி டேட்டாவை பெறலாம்.
இது முந்தைய திட்டத்தைவிட 10 ஜிபி டேட்டா அதிகமாகும். மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், டாக்டைம் வேல்யூ கிடையாது. மற்ற சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ் சலுகை இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது.
மேற்கண்ட் ப்ரீபெய்ட் திட்டங்களில் வேலிடிட்டி கம்மியாக இருக்கிறதே, கம்மியான டேட்டாவில் அதிக வேலிடிட்டி கிடைக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா? என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மூன்றாவதாக ஒரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் வேலிடிட்டி டபுளாக கிடைக்கும். அதற்கு ஏற்ப டேட்டா சலுகை குறைக்கப்பட்டு கிடைக்கும். இதை இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 319 Prepaid Plan): இந்த திட்டம் ரூ.300 பட்ஜெட்டைவிட ரூ.19 அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்த விலையைவிட கூடுதலாக சலுகை கொடுக்கும்படி 65 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 2 மாதங்களுக்கு மேல் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
முன்பே சொன்னது போல டேட்டா சலுகை குறைவாகவே கிடைக்கிறது. ஆகவே, 10 ஜிபி டேட்டாவை மட்டுமே இந்த 65 நாட்கள் முழுவதுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்காது. மேலும், 300 எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த மூன்று திட்டங்களில் எது பெஸ்ட் என்று நீங்களே முடிவெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








