Home
News

Jio-வுக்கு BSNL சவால்.. தினமும் 3GB டேட்டா.. ரூ.250 விலையை விட ரொம்ப கம்மி.. அம்பானியே ஆடிபோய்ட்டாரா?

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போல அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது வேற லெவலில் இந்தியாவில் செயல்பட துவங்கியுள்ளது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் எல்லாம் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை இத்தனை நாட்களாக ஒரு போட்டியாளராக கூட மதிக்காமல் இருந்தன என்பதே உண்மை. ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தனியார் நிறுவனங்கள் எல்லாவற்றிக்கும் ஆப்பு வைக்க பார்க்கும் நிறுவனமாக பிஎஸ்என்எல் மாறியுள்ளது.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள், கடந்த ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட திடீர் விலை ஏற்றம் காரணமாக மக்கள் இப்போது தனியார் டெலிகாம் நெட்வொர்க் சேவையில் இருந்து, அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு கூட்டம் கூட்டமாகவும், குடும்பம் குடும்பமாகவும் மாறத்துவங்கியுள்ளனர். இதனால், டெலிகாம் துறையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

Jio-வுக்கு BSNL சவால்.. தினமும் 3GB டேட்டா.. ரூ.250 விலையை விட கம்மி..

Jio, Airtel, Vodafone Idea-வுக்கு சவால் விடும் BSNL.. அம்பானியே ஆடிபோய்ட்டாரா?

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) நெட்வொர்க் சேவையை வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 3ஜி (3G) சேவையை மட்டுமே பரவலாக வழங்கி வருகிறது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் உள்ள பல இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் BSNL 4G நெட்வொர்க் சேவையை தற்போது விரிவுபடுத்தி வருகிறது.

கடுமையான விலை ஏற்றத்திற்கு பிறகு, மக்கள் 3ஜி சேவையாக இருந்தால் கூட பரவாயில்லை, விலை மலிவாக இருந்து நன்மை கூடுதலாக கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு மாறிவிட்டனர். ஒரு புறம் இந்த காரணத்திற்காக பல தனியார் டெலிகாம் பயனர்கள் இப்போது பிஎஸ்என்எல் பக்கம் மாறிவிட்டார்கள் என்றாலும், இன்னும் சில பயனர்கள் எதிர்கால விளைவுகளை மனதில் வைத்து, சாமர்த்தியமாக இப்போதே பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறிவிட்டனர்.

காரணம், இன்னும் 6 மாதங்களுக்குள் இந்தியா முழுக்க பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கவிருக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்த 9 மாதங்களில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையும் இந்தியா முழுக்க விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே மக்கள் பிஎஸ்என்எல் பக்கம் தாவ துவங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் BSNL நிறுவனம் இப்போது மலிவு விலையில் தினமும் 3GB டேட்டா கிடைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 247 திட்டம் (BSNL Rs 247 Plan):

இந்த புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ. 247 திட்டம் (BSNL Rs 247 Plan) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் தினசரி 3GB டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை போன்றவற்றை வழங்குகிறது. இதில் இலவச எஸ்எம்எஸ் நன்மை கிடையாது. இந்த திட்டம் வழக்கமான 28 நாள் மற்றும் 30 நாள் போன்ற வேலிடிட்டியை வழங்காமல், 36 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

உண்மையில் இதுவொரு மகத்தான திட்டமாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்தவொரு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் இத்தகைய நன்மையுடன், இவ்வளவு மலிவு விலையில் 36 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யவே இப்போது குடும்பம் குடும்பமாக மக்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை வாங்க துவங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 247 Plan With 3GB Daily Data and Unlimited Voice Calls Benefit For 36 Days Validity To Prepaid Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X