Home
News

பழையபடி பட்டையை கிளப்பும் BSNL.. ரூ.250 க்கு 50GB டேட்டாவுடன் எத்தனை நாள் வேலிடிட்டினு சொன்னா நம்புவீங்களா?

பான்-இந்தியா 4ஜி அறிமுகத்திற்கு பின்னர், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது பம்பரம் போல சுழன்று கொண்டு இருக்கிறது. இப்போது தான் பிஎஸ்என்எல்-ன் திட்டங்கள் ஆனது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவின் திட்டங்களுடன் "சரிக்கு சமமாக" போட்டியிடுகிறது என்றே கூறலாம்.

ஏனென்றால் 4ஜி அறிமுகத்திற்கு முன்பு வரையிலாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் "4ஜி இல்லையே" என்கிற வாதம் தான் முதலில் வைக்கப்படும், இப்போது அதை சொல்ல முடியாது. பிஎஸ்என்எல்-ன் பெஸ்ட் திட்டங்களை "பெஸ்ட்" என்று ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அப்படியான ஒரு பெஸ்ட் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தான் ரூ.247 பிளான்!

பழையபடி பட்டையை கிளப்பும் BSNL.. ரூ.250 க்கு 50GB டேட்டாவுடன்!

அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ரூ.247 திட்டமானது மொத்தம் 50ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது என்பது கூடுதல் சுவாரசியம். இது ஒரு புதிய திட்டம் அல்ல. உண்மையில் இது பலராலும் அடிக்கடி ரீசார்ஜ் செய்யப்படும் ஒரு திட்டமாகும்; ஆனாலும் இது இன்னுமும் பலருக்கும் தெரியாத, அதிகம் பேசப்படாத ஒரு திட்டமாகவே உள்ளது. இத்தனைக்கும் இது நாடு முழுவதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: அடிப்படை நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும். கூடவே இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சேவையும் கிடைக்கும்.

இது தவிர, ரூ.247 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 50ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் பெறுவார்கள். கடைசியாக மெயின் அக்கவுண்ட்டில்ரூ.10 மதிப்புள்ள டால்க் டைமும் சேர்க்கப்படும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மொத்த சேவை செல்லுபடியாகும் காலம் - 30 நாட்கள் ஆகும். ஒட்டுமொத்தமாக - ரூ.250 க்குள் தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கூட வழங்காத நன்மைகளை பிஎஸ்என்எல் ரூ.247 வழியாக வழங்குகிறது.

இதைவிட மலிவான திட்டத்தை நீங்கள் தேடினால் ரூ.99-ஐ ரீசார்ஜ் செய்யலாம். இது பிஎஸ்என்எல்-ன் மிகவும் பிரபலமான என்ட்ரி லெவல் பிளான் ஆகும். இது ரூ.100 க்கும் குறைவான விலையில் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்பும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திட்டமாகும்.

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-ன் ரூ.99 திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் "அன்லிமிட்ட் டேட்டா" உடன் வருகிறது. உண்மையில் இதன் கீழ் 50எம்பி டேட்டா மட்டுமே ஹை-ஸ்பீட் டேட்டாவாக கிடைக்கும். அதன் பிறகு 40 கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடின் கீழ் டேட்டா கிடைக்கும். அதாவது உங்களுக்கு நிறைய டேட்டா தேவைப்பட்டால் அல்லது ஹைஸ்பீட் டேட்டா தேவைப்பட்டால் - இந்த திட்டம் உங்களுக்கு சரியானதல்ல.

மாறாக மிகவும் மலிவான விலைக்கு, வாய்ஸ் கால் நண்மைகள் மட்டுமே தேவைப்பட்டால் அல்லது ரூ.100 க்குள் என்கிற பட்ஜெட்டில் உங்கள் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்பினால் - இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டத்துடன் இணைக்கப்பட்ட சர்வீஸ் வேலிடிட்டி (சேவை செல்லுபடியாகும் காலம்) 15 நாட்கள் ஆகும்.

சமீபத்தில் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்தில் செய்யாத ஒரு சாதனையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் செய்து இருந்தது. டிராய் (TRAI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி - கடந்த ஆகஸ்ட் 2025 இல் பிஎஸ்என்எல் நிறுவனமானது ஏர்டெல் நிறுவனத்தை விட அதிக எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

ஆனாலும் கூட முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆகஸ்ட் 2025 இல் ரிலையன்ஸ் ஜியோ - 19 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் - 13.85 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளது. கடைசியாக ஏர்டெல் - 4.96 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளது. இதில் இருந்து பிஎஸ்என்எல் ஒரு வலிமை மிக்க டெலிகாம் ஆபரேட்டர் ஆகவும், தனியார் நிறுவனங்களுடன் போய்ட்டியிடும் "பழைய நிலைக்கு" திரும்பி உள்ளதையும் வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 247 Plan 50GB Data 30 Days Validity Even Private Telecom Operators Wont Offer This Much
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X