Home
News

BSNL போட்ட ஒரே போடு.. 30 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.10 டால்க் வேல்யூ.. மலிவு விலைக்கு வாய்ஸ் கால்கள்.. டேட்டா!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களில் டால்க் வேல்யூ கொண்ட திட்டங்கள் பெரிதாக இல்லை. ஆனால், பிஎஸ்என்என் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு டால்க் வேல்யூவுடன் திட்டங்கள் கிடைக்கிறது. இதில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 247 திட்ட விவரங்கள் (BSNL Rs 247 Plan Details): வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எஎம்எஸ் மற்றும் போஸ்ட் டேட்டா போன்ற வழக்கமான சலுகைகளுடன் டால்க் வேல்யூ இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் (Unlimited Local, STD Voice) கிடைக்கிறது.

BSNL போட்ட ஒரே போடு.. 30 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.10 டால்க் வேல்யூ!

மேலும், நேஷனல் ரோமிங் வாய்ஸ் (National Roaming Voice) கிடைக்கிறது. இதில் தினசரி டேட்டா சலுகை கிடைக்காது. இருப்பினும், 50 ஜிபி டேட்டாவை கொடுத்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுக்கும் மேல் கிடைக்கிறது. இருப்பினும், இதற்கு தினசரி லிமிட் கிடையாது.

30 நாட்கள் வேலிடிட்டியில் தேவைக்கு ஏற்ப அதிகமாகவும், குறைவாகவும் பயன்படுத்தலாம். மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படுகிறது. 50 ஜிபி டேட்டா முடிந்த பிறகு இந்த போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.

இந்த சலுகைகள் போக ரூ.10 டால்க் வேல்யூ கொடுக்கப்படுகிறது. டால்க் வேல்யூ வேண்டாம் என்றால், இதைவிட ரூ.4 மட்டுமே விலை அதிமாக கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் பைடிவி (BiTV) சலுகை பெற்று கொள்ளலாம். இதில் லைவ் டிவி சேனல்களை ஸ்மார்ட்போனில் பார்த்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 251 திட்ட விவரங்கள் (BSNL Rs 251 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், டேட்டா கூடுதலாக கிடைக்கும். அதாவது, முந்தைய திட்டத்தில் வேலிடிட்டி நாட்கள் முழுவதுக்கும் சேர்த்து 50 ஜிபி டேட்டா கிடைத்தது. ஆனால், இதில் 100 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுக்கும் அதிகமாக கணக்கில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த 100 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ் சலுகைகள் இதிலும் கிடைக்கிறது.

மேலும், 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளும்படி பைடிவி சலுகை கிடைக்கிறது. இதில் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். ஆனால், இதை ஸ்மார்ட்போனில் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். இதே வேலிடிட்டியில் தினசரி டேட்டாவுடன் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், இந்த திட்டங்களைவிட மலிவான விலைக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ. 228 திட்ட விவரங்கள் (BSNL Rs 228 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாதாந்திர வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ரீசார்ஜ் செய்த தேதியில் இருந்து அடுத்த மாதம் அதே தேதி வரையில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த திட்டங்களில் லம்ப்-சம் டேட்டா, தினசரி டேட்டா மற்றும் டால்க் வேல்யூவுக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 247 Plan 30 Days Validity 50GB Data Rs 10 Talk Value Unlimited Voice Calls Check Combo Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X