Home
News

Jio, Airtel தலையில் இடி.. மாதம் ரூ.205 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.1 லட்சம் காப்பீடு.. வாய்ஸ் கால்கள்!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர் (Special Tariff Voucher) திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், விபத்து காப்பீடு மற்றும் சைபர் இன்சூரன்ஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. ரூ.205 மாத செலவில் வருடம் முழுவதும் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2449 எஸ்டிவி திட்டத்தில் ரூ.1 லட்சத்துக்கான தனிநபர் விபத்து காப்பீடு மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் கிடைக்கிறது. இதுபோக வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் வருடம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, மாதத்துக்கு ரூ.205 செலவில் பெற்று கொள்ளலாம்.

Jio, Airtel தலையில் இடி.. மாதம் ரூ.205 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ.2249 எஸ்டிவி திட்ட விவரங்கள் (BSNL Rs 2449 STV Plan Details): இந்த திட்டத்தில் சலுகைகளை பார்க்கையில், 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை வழங்கி இருக்கிறது.

மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 730 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் ரூ.2249 எஸ்டிவி திட்டம் கொடுக்கிறது. நாளொன்றுக்கு கிடைக்கும் 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த பிஎஸ்என்எல் ரூ.2249 எஸ்டிவி திட்டம் கொடுக்கிறது. இந்த சலுகைகளே மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. ஆனால், இதற்கு மேலாக தனிநபர் விபத்து காப்பீடு (Personal Accident Cover) மற்றும் சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் (Cyber Insurance Coverage) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் விபத்து காப்பீடு ரூ.1 லட்சத்துக்கு மட்டுமெ செல்லுபடியாகும். இதில் சாலை விபத்து, தீ காயம், பாம்புக்கடி, மின்னல் தாக்குதல் மற்றும் மின்சார தாக்குதல் உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல ரூ.10 ஆயிரத்துக்கு கிடைக்கும் சைபர் இன்சூரன்ஸ் கவரேஜிலும் குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன.

சைபர் திருட்டு, ஃபிசிங் மற்றும் ஈ-மெயில் ஸ்பூஃபிங் ஆகியவற்றுக்கு பொருந்தும். இதுபோன்று சைபர் பாதிப்புக்குள்ளான 7 நாட்களில் புகார் தெரிவிக்க வேண்டும். ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்துக்கு பிறகில் இருந்தே இந்த சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் ஆக்டிவாக கருதப்படும். வருடத்துக்கு 3 முறை கிளைம் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தை வழக்கம்போல ரீசார்ஜ் செய்ய முடியாது. பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. 1800 11 8485 நம்பரை அழைத்து பெற்று கொள்ளலாம். மலிவான விலைக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், விபத்து காப்பீடு மற்றும் சைபர் கவரேஜ் கிடைப்பதால், இந்த திட்டம் அதிகமாக பெறப்படுகிறது.

இதேபோல பிஎஸ்என்எல் ரூ.202 திட்டத்திலும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 32 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்காது. 300 நிமிடங்களுக்கு மட்டுமே வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 5 ஜிபி டேட்டா கிடைக்கும். முந்தைய திட்டத்தை போலவே விபத்து காப்பீடு மற்றும் சைபர் கவரேஜ் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2449 STV Plan With 365 Days Validity Unlimited Voice Calls 1 Lakh Personal Accident Cover
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X