BSNL-க்கு அடிடா சல்யூட்.. மாதம் ரூ.204 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 730 ஜிபி டேட்டா!
டெலிகாம் கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் வேலிடிட்டி கிடைக்கும் திட்டங்களை மலிவான விலைக்கு பெற வேண்டுமானால், ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்களைவிட பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் மட்டுமே அது சாத்தியமாக இருக்கிறது. அதிலும், கூடுதல் சலுகைகள் கொடுக்கப்பட்டுவதால், போட்டிப்போட்டு ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ.2449 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2499 Prepaid Plan): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் மொத்தம் 730 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடியும். இதுபோக 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த சலுகைகள் மாதம் ரூ.204 செலவில் கிடைக்கிறது.
அதாவது, இந்த திட்டத்துக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாத செலவை கணக்கிட்டால், ரூ.204 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், தனிநபர் விபத்து காப்பீடு (Personal Accident Cover) மற்றும் சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் (Cyber Insurance Coverage) வருகிறது.
இதில் ரூ.1 லட்சத்துக்கு விபத்து காப்பீட்டை கிளைம் செய்து கொள்ளலாம். இந்த கிளைமை சாலை விபத்து (Road Accident), தீ காயம் (Burn), பாம்புக்கடி (Snake Bite), மின்னல் தாக்குதல் (Lightning) மற்றும் மின்சார தாக்குதல் (Electrocution) ஆகிவற்றில் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதுபோக ரூ.10,000 வரையில் சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் கொடுக்கப்படும்.
இதில் சைபர் திருட்டு (Cyber Theft), ஃபிசிங் (Phishing), ஈ-மெயில் ஸ்பூஃபிங் (Email Spoofing) உள்ளிட்டவைக்கு மட்டுமே கிளைம் கிடைக்கும். சைபர் திருட்டால் பாதிக்கப்பட்ட 7 நாட்களுக்கு புகார் தெரிவித்தால் மட்டுமே, கிளைமை பெற முடியும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு அடுத்த 24 மணி நேரத்துக்கு பிறகில் இருந்தே மட்டுமே கவரேஜ் ஆக்டிவாக கருதப்படும்.
வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே இப்படி கிளைம் செய்து, தொகையை பெற்று கொள்ள முடியும். இந்த இன்சூரன்ஸ் போன்ற சலுகைகள் வேண்டாம், மலிவான விலைக்கு வருடம் முழுவதும் வேலிடிட்டி கிடைத்தால் மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ரூ.1999 திட்டம் சரியான தேர்வாக இருக்கும். இதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 Prepaid Plan): இது முந்தைய திட்டத்தைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, 330 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கொடுக்கும். ஆனால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும். இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காது.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 330 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். 10 ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்படும். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications
