2026 முழுக்க இதுதான் பெஸ்ட் BSNL ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.200.. 365 நாள் வேலிடிட்டி, 730GB டேட்டா!
அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) வருகிற 2026 ஆம் ஆண்டில் பல உச்சங்களை தொடும் என்றும்.. ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிரான ஒரு முக்கியமான போட்டியாளர் ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக பிஎஸ்என்எல் ஆனது புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் மிகவும் மலிவான விலைக்கு, நிறைய நன்மைகளுடன் நீண்ட கால வேலிடிட்டி உடன் வரும் பல திட்டங்கள் ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளது. அதிலொரு திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

அது நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குக் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.2399 திட்டமாகும். இது 365 நாட்கள் அல்லது 12 மாதங்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் திட்டமாகும். அதாவது மாதத்திற்கு ரூ.200 என்கிற (ரூ.200 x 12 மாதங்கள் = ரூ.2399) செலவில் கிடைக்கும்.. ஒரு சூப்பர்-லாங் வேலிடிட்டி பிளானாகும்.
பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 திட்டமானது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும். ஆக இந்த திட்டத்தின் கீழ் (செல்லுபடியாகும் காலம் முழுவதும்) மொத்தம் 730ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை தங்கள் பிஎஸ்என்எல் மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்கள் அல்லது மாதாந்திர ரூ.200 க்கு மேலான தொகையை ரீசார்ஜ்ஜிற்காக செலவு செய்ய விரும்பாதவர்கள் - கண்களை மூடிக்கொண்டு ரூ.2399-ஐ ரீசார்ஜ் செய்யலாம்.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது மொத்தம் 8 திட்டங்களின் வேலிடிட்டியை குறைத்தும் இங்கே குறிப்பிடத்தக்கது அதில் பிஎஸ்என்எல் ரூ.1499, ரூ.997, ரூ.897, ரூ.599 மற்றும் ரூ.439 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்களும் அடங்கும். திருத்தப்பட்ட ரூ.1499 திட்ட வவுச்சர் இப்போது வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இப்போது இது 32ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
முன்னர் 24ஜிபி டேட்டாவை வழங்கியது. இதன் வேலிடிட்டி 336 நாட்களில் இருந்து 300 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டம் எக்ஸ்ட்ரா டேட்டாவை பெறும் மறுகையில் 36 நாட்கள் குறைவான வேலிடிட்டிடியை வழங்குகிறது. இதேபோல திருத்தப்பட்ட ரூ.997 வவுச்சர் இப்போது 160 நாட்கள் என்கிற வேலிடிட்டிக்கு பதிலாக 150 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே வழங்கும்.
நன்மைகளை பொறுத்தவரை, அன்லிமிடெட் வாய்ஸ் (உள்ளூர்/எஸ்டிடி/ரோமிங், மும்பை மற்றும் டெல்லி உட்பட), டெய்லி 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் திருத்தப்பட்ட ரூ.897 வவுச்சர் இப்போது 180 நாட்கள் என்கிற வேலிடிட்டிக்கு பதிலாக 165 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதாவது 15 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் டேட்டா நன்மையானது 90ஜிபி இல் இருந்து 66ஜிபி ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல்-ன் இந்த வொர்க் ப்ரம் ஹோம் (Work From Home) ரூ.599 எச்டிவி திட்டத்தின் வேலிடிட்டி ஆனது 84 நாட்களில் இருந்து 70 நாட்களாக குறைக்கபட்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை ஹோம் மற்றும் நேஷனல் ரோமிங்கில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், டெய்லி 3ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
கடைசியாக ரூ.439 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இது 90 நாட்களுக்கு பதிலாக 80 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். இதுவொரு வாய்ஸ் ஃபோகஸ்டு பிளான் ஆகும். அதாவது டேட்டா நன்மையை வழங்காது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்கும்.


Click it and Unblock the Notifications








