ஒரே ரீசார்ஜ்.. 395 நாள் வேலிடிட்டி.. தினமும் 2GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளிக்கொட்டிய BSNL.. என்ன விலை?
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அதிக டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மைகளை வழங்கி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 2399 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும்.
இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். ஹார்டி கேம்ஸ், சேலஞ்சர் அரினா கேம்ஸ், கேமியன் ஆஸ்ட்ரோடெல், ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் திட்டம் ஆனது அதிக டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். இதுதவிர நீண்ட நாள் வேலிடிட்டி தரும் பிஸ்என்எல் திட்டங்கள் உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 2999 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக அதிக டேட்டா நன்மை இந்த திட்டத்தில் இருப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 1999 plan) ஆனது மொத்தம் 600ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஹார்டி கேம்ஸ்,சேலஞ்சர் அரினா கேம்ஸ், ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்கள் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 1499 plan) ஆனது மொத்தம் 24ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை விரைவில் வழங்கும். தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம். குறிப்பாக 4ஜி அறிமுகமான சில மாதங்களில் 5ஜி சேவையும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








