Home
News

அடிச்சு தூக்கும் BSNL.. 395 நாளுக்கு அட்டகாசமான நன்மை.. இந்த திட்டத்தில் இவ்வளவு லாபமா? எந்த விலை திட்டம்?

அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்திய மக்களை கவரும் விதத்தில் மிகவும் மலிவு விலையில் ஒரு பெஸ்டான மற்றும் லாபகரமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Best and profitable prepaid recharge plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் 1 வருடத்தை தாண்டிய 395 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை என்ன? இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது இங்கே.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றத்திற்கு பிறகு, ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக மாறியுள்ளன. சாமானிய மக்களால் இப்போது குறைந்த விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வாங்க முடிவதில்லை. வேறு வழி இன்றி மக்கள் இப்போது அவர்களின் தேவைக்கேற்ற திட்டங்களை வேறு வழி இன்று ரீசார்ஜ் செய்து வருகிறார்கள்.

அடிச்சு தூக்கும் BSNL.. 395 நாளுக்கு அட்டகாசமான நன்மை..

இதற்கு நடுவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மட்டும் படு குஷியில் இருக்கிறார்கள். காரணம், Bharat Sanchar Nigam Limited நிறுவனம் இப்போது மிகவும் மலிவு விலையில் 1 வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இதில் BSNL நிறுவனம் இப்போது 1 வருடத்தை தாண்டிய 395 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டத்தை வழங்க துவங்கியுள்ளது.

வருடாந்திர திட்டங்கள் என்றாலே ரூ.1000 விலைக்கு கீழ் குறைவில்லாமல் இருக்கும், இதை எப்படி மலிவு விலை திட்டம் என்று கூறுகிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்பலாம். உண்மையை சொல்ல போனால், நீங்கள் ரீசார்ஜ் செய்யும் 1 மாத திட்டம், 3 மாத திட்டம், அல்லது 6 மாத திட்டங்களை விட வருடாந்திர திட்டங்கள் தான் அதிக லாபகரமானவை மற்றும் விலை மலிவானவை.

இந்த உண்மை இங்கு பலருக்கும் தெரிவதில்லை. ஒரே ஒரு முறை 1 வருட ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்து பார்த்தால், அதன் லாபம் மற்றும் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய டென்ஷன் இல்லாத தொலைத்தொடர்பு அனுபவத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். நாம் இங்கு பார்க்கவிருக்கும் திட்டம், 365 நாட்கள் செல்லுபடி இல்லாமல் கூடுதலாக 30 நாட்கள் சேர்த்து 395 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இந்த திட்டம் பிஎஸ்என்எல் ரூ. 2399 பிளான் (BSNL Rs 2399 Plan) என்ற பெயருடன் வருகிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் 395 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் பயனர்கள் 395 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா நன்மையை நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 790GB டேட்டாவை வழங்குகிறது. இது 395 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையையும் வழங்குகிறது.

அதேபோல், இதன் முழு செல்லுபடியாகும் வேலிடிட்டிக்கு நிகரான தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டத்தில் கூடுதல் இலவச நன்மைகளையும் பிஎஸ்என்எல் வாரி வழங்கியுள்ளது. இதில் Zing Music, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games, மற்றும் Gameon Astrotel போன்ற நன்மைகள் கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் விலை ரூ. 2399 தான் என்றாலும், இதன் மாதாந்திர கட்டணம் வெறும் ரூ.199 மட்டுமே செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையில் உங்களுக்கு எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் இத்தகைய நன்மையை இந்தியாவில் வழங்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL's Rs 2399 Recharge Plan Offers 395 Days Validity with 2GB Daily Data Unlimited Voice Calls and 100 SMS Per Day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X