மாதம் ரூ.184.. 395 நாள் வேலிடிட்டி.. அசால்ட்டாக வாரி கொடுத்த BSNL.. அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ், SMS எல்லாம்..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது அதன் பயனர்களுக்கு 395 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ஒரு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை மாதம் ரூ.184 என்ற கட்டணத்துடன் ஒரு வருடத்திற்கும் மேலான செல்லுபடியை வழங்குகிறது. இது பற்றிய விபரங்கள் இதோ.
BSNL: மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL), அதன் பயனர்களை கவர பல சுவாரசியமான அறிவிப்புகளை இப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் BSNL நிறுவனம் இப்போது ஒரு ஆண்டும் மேல் செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் இப்போது இந்தியாவில் உள்ள பல வட்டங்களில் பயன்படுத்த கிடைக்கிறது.

BSNL ரூ. 2,399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்:
நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது ரூ. 2,399 விலையில் வருகிறது. ஆம், மக்களே இந்த திட்டத்தின் மொத்த விலை ரூ.2,399 ஆகும். ஆனால், மாதாந்திர கட்டணமாக இதை நாம் பிரித்து பார்க்கையில், இந்த BSNL ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டமானது ரூ.184 என்ற மலிவான விலையில் நமக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த விலையில் எந்தவொரு மாதாந்திர திட்டமும் இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகளை வழங்காது என்றே கூறலாம்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்: பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த ரூ. 2,399 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளை வழங்குகிறது. வாய்ஸ் கால்ஸ் என்று பார்க்கையில், இது லோக்கல், எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது.
790ஜிபி டேட்டா: இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக கிடைக்கும் டேட்டா நன்மையை பற்றி பார்க்கையில், இது அதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்தில் 790 ஜிபி நன்மையை வழங்குகிறது. இதுமட்டுமின்றி, தினசரி வழங்கப்படும் 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு, ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

அன்லிமிடெட் டேட்டா: ஆம், 40 Kbps வேகத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மை கிடைக்கிறது. எந்த வரம்பும் இல்லாமல், எந்தவித எக்ஸ்ட்ரா கட்டணமும் இல்லாமல் அன்லிமிடெட் டேட்டாவை உங்களால் பயன்படுத்த முடியும். இந்த திட்டம் உங்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நண்மைகள் போக BSNL நிறுவனம் இந்த திட்டத்துடன் கூடுதலாக இலவச நன்மையை வழங்குகிறது.
395 நாள் வேலிடிட்டி: இலவச நன்மையாக இந்த ரூ. 2,399 திட்டத்துடன் லோக்தூன் நன்மையையும் நிறுவனம் இப்போது வழங்குகிறது. BSNL பொதுவாக 365 நாள் வெளிப்படியாகும் 12 மாத ரீசார்ஜ் திட்டங்களை அதன் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால், இந்த திட்டம் மட்டும் 395 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது இந்த திட்டம் 13 மாதம் செல்லுபடியாகும் வாலிடியை வழங்குகிறது.
1 ஆண்டுக்கு மேலான வேலிடிட்டி: 1 வருடத்திற்கும் மேலாக வேலிடிட்டி வழங்கும் திட்டமாக இந்த ரூ. 2,399 திட்டம் திகழ்கிறது. உண்மையில் இதுவொரு பெஸ்ட் நீண்ட கால திட்டமாக அமைகிறது. 1 ஆண்டுக்கு ஒரே ஒரு முறை ரீசார்ச் செய்துவிட்டு நிம்மதியாக இருக்க இதுவொரு சிறந்த தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








