Home
News

அக்டோபர் 15 கடைசி.. BSNL சூப்பர் ஆஃபர்.. 380 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் சூப்பர் ஆஃபர் ஒன்றை வழங்கி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிஸ்என்எல் நிறுவனம் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் கூடுதல் வேலிடிட்டி சலுகையை வழங்கி உள்ளது. இப்போது இந்த திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 15 கடைசி.. BSNL சூப்பர் ஆஃபர்.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 15-க்குள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 380 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

இதுதவிர பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 760ஜிபி டேட்டா கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வேலிடிட்டி சலுகையானது அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15 வரை இருக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. ஒருவேளை 150 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 300ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 15 கடைசி.. BSNL சூப்பர் ஆஃபர்.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs.2399 prepaid plan offers 380 days validity, unlimited voice calls, 760GB data, SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X