சத்தமின்றி சலுகையை வழங்கிய BSNL.. 380 நாட்கள் வேலிடிட்டி.. தினசரி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். எனவே தான் பிஎஸ்என்எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகளை வழங்கி உள்ளது.
அதாவது பிஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் கூடுதல் சலுகைகளை வழங்கி உள்ளது. இப்போது இந்த திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் நன்மைகள் குறித்து இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் வரும் அக்டோபர் 15-க்குள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் தற்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 380 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொத்தம் 760ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வேலிடிட்டி சலுகையானது அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15 வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் ஒரு வருட வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டத்தையும் வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

அதிக டேட்டா உடன் ஒரு வருட வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
