Home
News

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 'இந்த' திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு பிரச்சனை இருக்காது! எந்த திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2399

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2399 ப்ரிபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது. கண்டிப்பாக இந்த கூடுதல் சலுகை பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது இந்த ரூ.2399 ப்ரிபெய்ட் திட்டத்தின் நன்மைகளை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2,399 திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு 60 நாட்கள் கூடுதல்
வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. எனவே பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது ரீசார்ஜ் செய்தால் 425 நட்கள்
வேலிடிட்டி பெறமுடியும்.

அதேபோல்

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான இலவச சந்தா போன்ற பல சலுகைகள் உள்ளன. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு கூடுதல் வேலிடிட்டி சலுகை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த சலுகை இன்னும் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு ரீசார்ஜ் பிரச்சனை இருக்காது. மேலும் இப்போது ரூ.500-க்கு கீழ் கிடைக்கும்அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

 பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 என்று அழைக்கப்படும் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். இதுதவிர Eros Now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்தஅசத்தலான திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 81 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டி,பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். மேலும்
இது இணையதளத்தில் 'டேட்டா வவுச்சரின்' கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது.அதேபோல் இந்த ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும்பெறலாம்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 என்று அழைக்கப்படும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் எந்தவொரு OTT சந்தாவையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 prepaid plan available with additional valid offer: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X