Home
News

Jio, Airtel-ஐ முடித்த BSNL.. மாதம் ரூ.184 க்கு 412 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 824 ஜிபி டேட்டா!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களால் நினைத்து கூட பார்க்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், வருடாந்திர திட்டங்களை வைத்துள்ளது. இதில் மாதத்துக்கு ரூ.184 செலவில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 வருடத்துக்கும் மேல் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.

டெலிகாம் மார்கெட்டில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களே வருடாந்திர திட்டங்களாக கிடைக்கின்றன. அதேபோல அதிகபட்ச வேலிடிட்டி கொண்ட திட்டங்களாகவும் இவையே இருக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம், 365 நாட்களுக்கும் மேல் வேலிடிட்டி கொடுக்கிறது. 412 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது.

Jio, Airtel-ஐ முடித்த BSNL.. மாதம் ரூ.184 க்கு 412 நாட்கள் வேலிடிட்டி!

இந்த 412 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமே மாதத்துக்கு ரூ.184 செலவில் கிடைக்கிறது. அதாவது, ரூ.2,399 விலை கொண்ட திட்டத்துக்கு 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மாதத்தில் கணக்கிட்டால், 13.5 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 1 மாதத்துக்கு செலவாகும் தொகையானது வெறும் ரூ.184 ஆக மட்டுமே இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2,399 Plan Details): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் 5 சலுகைகள் கிடைக்கின்றன. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, போஸ்ட் டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் வேலிடிட்டி ஆகியவை கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் வழக்கமான வேலிடிட்டி 365 நாட்களாக உள்ளது.

ஆனால், இப்போது கூடுதலாக 47 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு 412 நாட்களாக கிடைக்கிறது. ஆகவே, 13.5 மாதங்களுக்கு வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கின்றன.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 412 நாட்களுக்கு மொத்தமாக 824 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் எப்யூபி (FUP) டேட்டா கிடைக்கும். இது ஜியோ, ஏர்டெல் கிடைப்பதைவிட அதிகமாகும்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டம் கொடுத்துள்ளது. இதில் கிடைக்கும் 365 நாட்கள் எப்போதும் கிடைக்கும் வேலிடிட்டியாக இருக்கிறது. கூடுதலாக கிடைக்கும் 47 நாட்கள் வேலிடிட்டி சலுகையில் கிடைக்கிறது. ஆகவே, இதை செப்டம்பர் 12 ஆம் தேதி வரையில் மட்டுமே பெற்று கொள்ள முடியும்.

அதாவது, செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு முன்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்தால் வழக்கம்போல 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு வருடாந்திர திட்டமும் பிஎஸ்என்எஸ் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.1,999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1,999 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்தில் 330 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 11 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். இதில் கூடுதல் வேலிடிட்டி கிடைக்காது. இதை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த டேட்டாவை பயன்படுத்தி முடித்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கின்றன. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்படுகின்றன. இதற்கான மாத செலவு ரூ.166 ஆக மட்டுமே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 Plan With Unlimited Voice Calls 824 GB Data 412 Days Validity Check Plan Voucher
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X