Home
News

BSNL சிம் கார்டு கொடுங்க.. 4G-க்கு மாத்துங்க.. ரூ.184 போதும்.. 395 நாட்கள் வேலிடிட்டி.. கடைசி பந்தில் சிக்ஸ்!

லாஸ்ட் ஓவர்ல அடிச்சான் பாரு சிக்ஸ் என்றும் சொல்லும் அளவுக்கு ஒரு பக்கம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களில் மாற்றங்களை செய்துவரும் நேரத்தில், மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, சத்தமே இல்லாமல் மிகப்பெரிய சம்பவத்தை செய்து முடித்துள்ளது. இதனால், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தங்களது சிம் கார்டுகளை அறக்க பறக்க அப்கிரேட் செய்து வருகின்றனர். இதுகுறித்த விவரம் முழு இதோ.

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்க இருந்தன. இதற்கேற்ப பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3ஜி டவர்கள் அனைத்தையும் 4ஜி டவர்களாக மேம்படுத்தும் பணியானது கிட்டத்தட்ட முடிந்தது. ஆனால், உள்நாட்டு தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாத 4ஜி சேவைகளில் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டது.

BSNL சிம் கொடுங்க.. 4G-க்கு மாத்துங்க.. ரூ.184 போதும்.. ஆண்டு சேவை!

இதனால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அதிருப்தியில் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு மாறத் தொடங்கினர். ஆனால், அடுத்த மூன்று மாதங்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்தின. இந்த சூழலில் பிஎஸ்என்எல் நிறுவனமே பரவாயில்லை போல என்ற எண்ணமும் பழைய கஸ்டமர்களிடையே ஏற்பட தொடங்கியது.

அதேபோல பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை வாங்கும் கஸ்டமர்கள் மற்றும் 3ஜி சிம் கார்டுகளை 4ஜியாக மாற்றும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது, 10,000 மொபைல் டவர்களை 4ஜி தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்திவிட்டதை அறிவித்திருக்கிறது. இதனால், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் அடுத்த சில மாதங்களில் கிடைக்க இருப்பது உறுதியாகிவிட்டது.

ஏனென்றால், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 4ஜி சேவைகளை தொடங்கவே சில மாதங்கள் பிடிக்கும். ஆனால், முழுவதும் 4ஜி சேவைக்கான பணிகள் முடிந்த மாநிலங்களில் எப்போது வேண்டுமானாலும் சேவைகள் தொடங்கப்படலாம். சொல்லப்போனால், ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் 4ஜி சேவைகள் கிடைக்கிறது.

BSNL சிம் கொடுங்க.. 4G-க்கு மாத்துங்க.. ரூ.184 போதும்.. ஆண்டு சேவை!

கர்நாடகாவின் மைசூர், மாண்டியா, சாமராஜநகர் மற்றும் குடகு மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்குகின்றன. மே மாதம் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் 4ஜி சேவை தொடங்கப்பட்டது. ஆகவே, அடுத்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சேவைகள் தொடக்கப்படுகிறது. சில மாவட்டங்கள் ஏற்கனவே சேவைகள் கிடைக்கின்றன.

ஆகவே, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மட்டுமல்லாமல், டெலிகாம் கஸ்டமர்களுக்கு மேலுமொரு நம்பிக்கையான நிறுவனமாக பிஎஸ்என்எல் மாறி இருக்கிறது. 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டால், கட்டாயம் மற்ற நிறுவனங்களைவிட அதன் விலை மலிவாகவே இருக்கும். 4ஜி சேவைக்கு முன்பே பின்வரும் திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்தில் அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, 4ஜி சேவைக்கு பிறகு விலை அல்லது சலுகைகளில் மாற்றம் வந்தாலும், இப்போதே ரீசார்ஜ் செய்துவிட்டால் லாபம் தானே என்று அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்துக்கு 395 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக 100 எஸ்எம்எஸ்கள், வாவ் எண்டர்டெயின்மெண்ட் சந்தா, பிஎஸ்என்எள் டியூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கிறன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 Plan With Unlimited Voice Calls, 2GB Data, 395 Days Validity Check Best Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X