Home
News

Jio, Airtel, Vi-க்கு கும்பிடு.. மாதாந்திரம் ரூ.171 போதும்.. 425 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்.. 2GB டேட்டா!

மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, டெலிகாம் மார்கெட்டிலேயே அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. 425 நாட்கள் (14 மாதங்கள்) வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இவ்வளவு மலிவான விலைக்கு கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளையும், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) அதிக வேலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டங்களின் சலுகைகளையும் இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டுமே 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களில் 365 நாட்கள் மட்டுமே அதிகபட்ச வேலிடிட்டியாக இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தில் 60 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கிறது.

Jio, Airtel, Vi-க்கு கும்பிடு.. மாதம் ரூ.171 போதும்.. 425 நாட்களுக்கு!

இந்த நாட்கள் முழுவதும் சலுகைகளும் கிடைப்பதால், இதைவிட சிம் ஆக்டிவ் சலுகையில் பெஸ்ட் திட்டம் இருக்க முடியாது. ஒரேவொரு ரீசார்ஜ் மூலம் 14 மாதங்களுக்கு சிம் கார்டு ஆக்டிவ் கிடைக்கிறது. அவுட்கோயிங் மற்றும் இன்கம்மிங் கால்களும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு வேலிடிட்டி முழுவதும் சலுகையும் வருகிறது.

ஆகவே, வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls), நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா ஆகிய சலுகைகள் கிடைக்கிறது. இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு கிடைக்காத 4ஜி மற்றும் 5ஜி டேட்டா வேகமானது இந்த திட்டத்தில் வருகிறது. அதாவது, 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. அதேபோல 4ஜி டேட்டா உள்ளது.

ஆகவே, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் என்னும் கணக்கில் சலுகைக் கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக கூடுதல் சலுகைகளை ஜியோ வைத்திருக்கிறது. ஆகவே, 90 நாட்கள் சந்தா கொண்ட ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஆப் பயன்படுத்த கிடைக்கிறது. இது ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஒரு முறை பெற்றுவிட்டால் அதற்கு பிறகு கிடைக்காது. திட்டத்தில் இருந்து விரைவில் நீக்கப்பட்டுவிடும்.

மேலும், ஜியோ டிவி (Jio TV) சந்தாவையும், ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகையையும் கொடுக்கிறது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், பிஎஸ்என்எல்லில் கிடைக்காத டேட்டா வேகம் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டா மற்றும் வேகத்தில் இந்த திட்டம் பிஎஸ்என்எல்லைவிட அதிக சலுகைகளை கொடுக்கிறது.

ஏர்டெல் ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 Prepaid Plan): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்திலும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஜியோ திட்டத்தை போலல்லாமல் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை மட்டுமே பெற முடிகிறது. ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவில் எந்த குறையும் இல்லை.

ஜியோவை போலவே கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் அப்படியே கொடுக்கப்படுகின்றன. அதாவது, 365 நாட்கள் முழுக்க நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் கூடுதல் சலுகைகள் எக்கச்சக்கமாக கொடுக்கப்படுகின்றன.

ஆகவே, அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) மற்றும் பிரீமியம் அல்லாத வீடியோ கன்டென்ட்களை கொடுக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் App (Airtel Xstream App) சந்தா கிடைக்கிறது. மேலும், எந்தவித கட்டணங்களுமின்றி வாய்ஸ் கால்கள் ஸ்பேம் அலெர்ட் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஸ்பேம் அலெர்ட் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

வோடபோன் ஐடியா ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 3599 Prepaid Plan): இந்த வருடாந்திர திட்டத்தில் டேட்டாவுக்கு மட்டுமே பல்வேறு சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது, 365 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மட்டுமல்லாமல், 12 மணி நேர இலவச டேட்டா கொடுக்கப்படுகிறது.

அதாவது, இந்த 2 ஜிபி டேட்டா கணக்கு இல்லாமல், நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இலவசமாக டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா சலுகைகள் போக வீக்கெண்ட் டேட்டோ ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையும், டேட்டா டிலைஸ்ட் (Data Delights) சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 5ஜி டேட்டா மட்டும் கிடையாது.

இருப்பினும், 12 மணி நேர இலவச டேட்டா கிடைப்பதால், அதற்கு சரியாக தோன்றுகிறது. மேற்கண்ட சலுகைகளின் அடிப்படையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே 425 நாட்கள் வேலிடிட்டி கொடுத்து முதல் இடம் பிடிக்கிறது. ஆனால், அது வேலிடிட்டியில் மட்டும்தான். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைத்தாலும், ஜியோ, ஏர்டெல், வோடபோனில் கிடைக்கும் வேகம் இருக்காது.

Take a Poll

ஆகவே, டேட்டா வேகத்தில் தனியார் நிறுவனங்கள் முந்துகின்றன. இதிலும் வோடபோன் ஐடியா மும்பை சர்க்கிளில் மட்டுமே 5ஜி டேட்டா சேவையை வழங்குகிறது. மற்ற மாநிலங்களில் 4ஜி டேட்டாவை மட்டுமே கொடுக்கிறது. ஆகவே, இந்த மூன்று தனியார் நிறுவனங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன.

இந்த ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களை ஒப்பிடுகையில் ஜியோவில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆனால், ஏர்டெல்லில் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. அதே நேரத்தில் ஜியோவில் புதிதாக சேர்க்கப்பட்ட ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, ஜியோ நிறுவனம் இந்த திட்டங்களில் முன்னணியில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 Plan With 425 Days Validity Unlimited Voice Calls 2GB Data Vs Jio Airtel Vodafone Idea
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X