ஏர்டெல்லுக்கு கும்பிடு.. மாதாந்திரம் ரூ.184 போதும்.. 395 நாட்கள் வேலிடிட்டி.. பிஎஸ்என்எல் முடிச்சு விட்ருச்சு!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு அதிகபட்ச விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டத்தையும், ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர திட்டத்தையும் அலசி ஆராய்ந்து பார்த்தால் டெலிகாம் கஸ்டமர்களே மூக்கில் விரல் வைத்துவிடுவார்கள். இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டிராய் (TARI) உத்தரவின்படி வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் கொண்டு வந்தது. இதனால், லம்ப்-சம் டேட்டாவுடன் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களின் விலை கனிசமாக உயர்ந்தது. இப்போது, ரூ.2249ஆக விலைக்கு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தையும் பிஎஸ்என்எல் திட்டத்தையும் ஒப்பிட்டு பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 2249 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் வருடாந்திர திட்டமாகும். ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், லம்ப்-சம் டேட்டாவையும் கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.
இதை தவிர வேறு டேட்டா சலுகைகள் கிடையாது. ஆகவே, 30 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா எதிர்பார்க்க முடியாது. டேட்டா வவுச்சர்களுக்கு மட்டுமே செல்ல வேண்டி இருக்கும். எஸ்எம்எஸ் சலுகையை பொறுத்தவரையில், மொத்தமாக கிடைக்கும். 3600 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் 365 நாட்களுக்கும் பொருந்தும்.
ஆனால், வாய்ஸ் கால்களில் எந்த பஞ்சமும் கிடையாது. 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. இதற்கு அடுத்து அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) சலுகை வருகிறது. இப்போது, பிஎஸ்என்எல் திட்டத்தை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல்லைவிட வெறும் ரூ.150 மட்டுமே அதிகமாக இருக்கிறது. ஆனால், 395 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. இதுபோக போஸ்ட் டேட்டாவும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
ஆகவே, முந்தைய திட்டத்தில் மொத்தமாகவே 30 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் 395 நாட்களுக்கு 790 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டா முடிந்துவிட்டாலும், ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகை மூலமாக 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த டேட்டாவை போலவே எஸ்எம்எஸ் சலுகைகளும் நாள்தோறும் கிடைக்கிறது. ஆகவே, 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். ஏர்டெல்லில் 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைத்தது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் 13 மாதங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி,நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
இந்த பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டத்துக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்று பார்த்தால், வெறும் ரூ.184 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. ஏர்டெல்லில் 4ஜி மற்றும் 5ஜி சேவை கிடைத்தாலும், 30 ஜிபிக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஆனால், பிஎஸ்என்எல் திட்டத்தில் 790 ஜிபி டேட்டாவை வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications








