BSNL விஸ்வரூம்.. மாசம் ரூ.184 போதும்.. 12 மாசம் இல்ல.. 13 மாசம் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கனவிலும் கொடுக்க நினைக்காத வேலிடிட்டியை மத்திய தொலைத்தொடர்பு துறையில் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. வெறும் ரூ.184 மாத செலவில் 395 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அத்தனை சலுகைகளையும் வாரி வழங்கி இருக்கிறது. இந்த அடிமட்ட விலையிலான வாருடாந்திர திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.
ரீசார்ஜ் கட்டங்களின் விலை உயர்வு காரணமாக மலிவு விலையில் திட்டங்களை வைத்திருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அந்த நிறுவனமும் வரும் கஸ்டமர்களை அப்படியே தக்க வைக்க அடிமட்ட விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களில் அதிகபட்சமாக 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த திட்டங்களின் விலை ரூ.3000-க்கும் மேல் இருக்கும். இது தினசரி டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுடன் கிடைக்கக்கூடிய திட்டங்களாகும்.
ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம், இந்த ரூ 2399 திட்டத்தில் 395 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. அதாவது, ஒரு வருடத்துக்கும் மேலாக மொத்தம் 13 மாதங்களுக்கு வேலிடிட்டியை கொடுக்கிறது. இந்த வருடாந்திர திட்டத்தின் சலுகைகளை பார்க்கையில், 13 மாதங்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் (STD Voice Calls) கிடைக்கிறது.
இதுபோக நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களையும் (National Roaming Voice Calls) பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். அதேபோல தினசரி டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை பெற்று கொள்ள முடியும். இது 395 நாட்களுக்கும் கிடைக்கக்கூடிய டேட்டா சலுகையாகும்.
ஆகவே, 790 ஜிபி டேட்டாவை இந்த வருடாந்திர திட்டத்தில் பெற்று கொள்ள முடியும். அதேபோல 395 நாட்களிலும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இப்படி வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த சலுகைகள் மட்டும்தானா என்றால் கிடையாது. கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன.
ஆகவே, மேற்கண்ட சலுகைகள் போக ஹர்டி கேம்ஸ் (Hardy Games), சேலன்ஜர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), கேம்ஆன் அஸ்ட்ரோடெல் (Gameon Astrotell) ஆகிய கேமிங் சலுகைகள் கிடைக்கின்றன. லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Potocast) மற்றும் ஜிங்க் மியூசிக் (Zing Music) சலுகைகள் கிடைக்கிறது. இதேபோல வேலிடிட்டி முழுவதும் பிஎஸ்என்எல் டியூன்ஸ் கிடைக்கிறது.
இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.184ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு 395 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் திட்டமாகவே இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனமானது, நாடு முழுவதும் 4ஜி சேவைகளை இன்னும் வழங்கவில்லை
இருப்பினும், படிப்படியாக 4ஜி சேவைகளை வழங்க தொடங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 4ஜி சேவைக்கான பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆகவே, வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் 4ஜி சேவைகளை எதிர்பார்க்கலாம். நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைத்துவிட்டால், மலிவான விலையில் அந்த நிறுவனத்திடம் மட்டுமே திட்டம் இருக்கும்.


Click it and Unblock the Notifications