BSNL சொல்லி அடி.. மாதம் ரூ.184 போதும்.. 13 மாதங்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள் 365 நாட்களுக்கு வேலிடிட்டி திட்டங்களை கொடுத்துவரும் நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதலாக 30 நாட்களோடு மொத்தமாக 395 நாட்கள் வேலிடிட்டி சலுகையை வழங்குகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.

ஆகவே, மொத்தமாக 790 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக திட்டத்தின் முதல் 30 நாட்களுக்கு பிஆர்பிடி (PRBT) சலுகை கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் (Eros Entertainment) மற்றும் லோக்தூன் (Lokdhun) சப்ஸ்கிரிப்ஷன் வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ 2999 திட்ட விவரங்கள் (BSNL Rs 2999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளோடு ஓடிடி சலுகை மற்றும் கூடுதல் வேலிடிட்டி சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ஆகவே, மொத்தமாக 1,095 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே, ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதை தினசரி டேட்டா 3 ஜிபிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ள முடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் 395 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த 2 திட்டங்களுக்கும் முன்னதாக 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்பட்டன.

ஆனால், வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வரையில், இந்த 2 திட்டங்களையும் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அண்மையில் அறிவித்தது.
இந்த பிஎஸ்என்எல் ரூ 2399 திட்டத்தின் மாதாந்திர செலவை பார்த்தால், ரூ.184 மட்டுமே தேவைப்படுகிறது.
அதேபோல பிஎஸ்என்எல் ரூ 2999 திட்டத்துக்கான மாதாந்திர செலவை கணக்கிட்டால், ரூ.230 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, 2 திட்டங்களும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சலுகைகள் கொடுக்கும் திட்டங்களாகவே இருக்கின்றன. கூடுதல் வேலிடிட்டி அல்லாமல் கம்மி விலையில் 365 நாட்கள் திட்டம் வேண்டுமானால், ரூ 1999 திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் தினசரி டேட்டா சலுகைக்கு பதிலாக மொத்தமாக 600 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு லிமிட் கிடையாது. வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இதுபோக ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் லோக்தூன் கன்டென்ட் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இது முதல் 30 நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல ப்ரீ பிஆர்பிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








