BSNL தலைவா நீ கிரேட்.. 395 நாள் வேலிடிட்டி.. தினமும் 2GB டேட்டா.. அன்லிமிடெட் நன்மையுடன் இலவசங்கள்.. மாஸ் தான்
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் எல்லாம் இப்போது 1 வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்யும் நீண்ட கால ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. அதாவது, 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே தனியார் டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். இவர்களை ஓவர் டேக் செய்யும் வகையில், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது 1 வருடத்திற்கும் மேலான வேலிடிட்டி கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
என்னது ஒரு வருடத்திற்கும் மேலான வேலிடிட்டியை கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமா? என்று உங்களில் சிலர் வியந்து கூட கேட்கலாம். ஆம் மக்களே, தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் நேரத்தில், ஒரு படி மேலே சென்று, பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட ஒரு மெகா சூப்பர் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan):
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மக்களை தன் வசம் ஈர்ப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. இந்த வரிசையில், தற்போது BSNL நிறுவனம் அதிக வேலிடிட்டி உடன் அறிமுகம் செய்திருக்கும் புதிய திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan).
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் பட்டியலில் அதிக நன்மைகளை அடக்கிய திட்டங்களில் ஒரு சிறந்த திட்டமாக இந்த பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் திகழ்கிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பேசுகையில், இது அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இதில் நேஷனல் ரோமிங் சேவையும் இலவசமாக கிடைக்கிறது.
அடுத்தபடியாக, இந்த BSNL Rs 2399 Plan இல் உங்களுக்கு தினமும் 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது. தினசரி வரம்பு முடிந்த பிறகு டேட்டாவின் வேகம் 40Kbps ஆக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மிதமான வேகத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் தினசரி 100 SMS நன்மையையும் வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலமான 395 நாட்களுக்கும் இந்த சேவையை நீங்கள் அனுபவிக்கலாம்.
அடேங்கப்பா.. இவ்வளவு BSNL இலவச நன்மைகளா? அதுவும் 395 நாட்களுக்குமா? மாஸ் தான்:
இது பெரு நீண்ட கால செல்லுபடியாகும் திட்டம் என்பதனால், இந்த வாடிக்கையாளர்களை குஷி அடைய செய்யும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இத்துடன் பல இலவச நன்மைகளையும் வழங்குகிறது. இதன் படி, இந்த ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யும் மக்களுக்கு, பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), கேம்ஆன் & ஆஸ்ட்ரோடெல் (Gameon &Astrotell),
கேமியம் (Gameium), லிஸ்டன்பாட்காஸ்ட் (Lystnpodcast), ஸிங்க் (Zing), வாவ் என்டர்டைன்மெண்ட் (wow Entertainment) போன்ற இலவச நன்மைகள் 395 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த திட்டம் சரியாக 1 முழுமையான வருடத்திற்கு செல்லுபடியை வழங்குவதோடு, கூடுதலாக 1 மாத செல்லுபடியையும் சேர்த்து வழங்கி, மொத்தமாக 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ரீசார்ஜ் செய்ய கிடைகிறது.


Click it and Unblock the Notifications