Jio-Airtel-லை நடுங்க வைத்த BSNL.. இனி எல்லாமே Free.. மொத்த கூட்டமும் BSNL பக்கம் தாவிடுச்சு.. எந்த திட்டம்?
ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கண்முடித்தனமாக அதிகரித்தன. இதன் மூலம் அவர்களுக்கு வருவாய் கிடைக்குமென்று தப்பான கணக்கை போட்டுவிட்டதாக நிறுவனங்கள் இப்போது உணர துவங்கியுள்ளனர். காரணம், நடைமுறைப்படுத்தப்பட புதிய டேரிஃப் விலை உயர்வுக்கு (New Tariff Price Hike) பிறகு, லட்ச கணக்கான பயனர்களை இந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் இப்போது தினசரி இழந்து வருகிறது. இப்போது மிகவும் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் (BSNL) நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர்.
தனியார் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றதால் விரக்தி அடைந்த மக்கள், இப்போது ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நெட்வொர்க்குகளில் இருந்து அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நெட்வொர்க்கு சேவைக்கு கூட்டம் கூட்டமாக தாவி வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இன்னும் சில மாதங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்கவுள்ளது. மறுபுறம், பிஎஸ்என்எல் திட்டங்களின் விலை மிகவும் மலிவானது மற்றும் லாபகரமான நன்மைகளை வழங்குகிறது.

BSNL திடீர் அறிவிப்பு.. இனி எல்லாமே Free.. மொத்த கூட்டமும் BSNL பக்கம் தாவிடுச்சு:
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தாவும் வாடிக்கையாளர்களை தடுக்கும் விதமாகவும், தன்வசம் ஈர்க்கும் விதமாகவும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இப்போது அதிரடியாக பல புதிய ஆஃபர்களை அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும், தனியார் நிறுவனங்கள் வழங்கும் ஆஃபர்களை அப்படியே தூக்கி சாப்பிடும் அளவிற்கு BSNL நிறுவனம் இப்போது 'இனி எல்லாமே இலவசம் தான்' என்ற புது நன்மையை வழங்கி அசத்தியுள்ளது.
இதற்கு முன்பு வரை BSNL நிறுவனம் அதன் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கு கட்டணங்களை வசூலித்து வந்தது. இப்போது நடக்கும் டெலிகாம் போரில் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் திட்டங்களுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் என்ற பல புதிய ஆபர்களை அள்ளி வீச துவங்கியுள்ளது. இதில் குறிப்பிட்டு கூறும் விதமாக 395 நாள் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தை BSNL அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan):
இந்த பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம், 395 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது 395 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையையும் வழங்குகிறது. இந்த புதிய திட்டம் 1 வருடத்திற்கும் மேலான நன்மையை வழங்குகிறது.
அதாவது 13 மாதங்களுக்கு இந்த நன்மையை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும், இந்த திட்டத்தின் பலன்களை நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக அனுபவிக்கலாம். ஜியோ மற்றும் ஐர்தேல் நிறுவனங்கள் வழங்கும் 1 வருட நீண்ட கால திட்டங்களின் விலை ரூ.3999 என்ற நிலையில், பிஎஸ்என்எல் மலிவு விலையில் 13 மாதத்திற்கு செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கி, தனியார் நிறுவனங்களை நடுங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








