Home
News

BSNL 395 நாள் வேலிடிட்டி பிளான்.. இந்த ஒரு திட்டம் போதுமே BSNL-க்கு மாற.. Jio, Airtel, Vi கவலை.. ஏன் தெரியுமா

கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் பக்கம் தாவி வருகின்றனர். தனியார் டெலிகாம் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்திய விலை உயர்வு மிகவும் மோசமானது என்றும், தங்களின் தனிப்பட்ட லாபத்திற்காக டெலிகாம் நிறுவனங்கள் சுயநலத்துடன் விலை உயர்வை அறிவித்துள்ளன என்றும், இந்த விலை அதிகரிப்பு ஒரு கொள்ளையடிக்கும் செயல் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் குற்றம் சாட்டியது.

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் புதிய டேரிஃப் விலை உயர்வை (New Tariff Price Hike) நடைமுறை படுத்தியதில் இருந்து, லட்ச கணக்கான பயனர்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து, இப்போது தினசரி பிஎஸ்என்எல் பக்கம் தாவி வருகின்றனர். இதற்கான காரணம், பிஎஸ்என்எல் திட்டங்கள் மட்டுமே இப்போது இந்தியாவை பொறுத்தவரையில், மிகவும் மலிவு விலையில் மக்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பது ஒரு காரணமாக இருக்கிறது.

BSNL 395 நாள் வேலிடிட்டி பிளான்.. இந்த திட்டம் போதுமே BSNL-க்கு மாற..

BSNL 395 நாள் வேலிடிட்டி பிளான்.. இந்த ஒரு திட்டம் போதுமே BSNL-க்கு மாற:

மற்றொரு காரணம் என்றால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்கும் இந்த 395 நாள் செல்லுபடியாகும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் தான் மக்களே. இந்த திட்டத்தின் காரணமாகவும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர் என்று கூட நாம் கூறலாம். இதற்கு முன்பு வரை BSNL நிறுவனம் அதன் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கு கட்டணங்களை வசூலித்து வந்தது.

இப்போது நடக்கும் டெலிகாம் போரில் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் திட்டங்களுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் என்ற பல புதிய ஆஃபர்களை அள்ளி வீச துவங்கியுள்ளது. இதில் குறிப்பிட்டு கூறும் விதமாக 395 நாள் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தை BSNL அறிமுகம் செய்துள்ளது.

இந்த பிஎஸ்என்எல் திட்டம் ரூ. 2399 விலையில் வருகிறது. இந்த திட்டம் வழக்கமான 365 நாள் வேலிடிட்டி போல இல்லாமல், 395 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது 395 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையையும் வழங்குகிறது.

1 வருடத்திற்கு மேல் வேலிடிட்டி.. 13 மாத செல்லுபடியாகும் காலம்:

இந்த புதிய திட்டம் 1 வருடத்திற்கும் மேலான நன்மையை வழங்குகிறது. அதாவது, இந்த திட்டம் மொத்தமாக 13 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தினமும் உங்களுக்கு வெறும் ரூ. 6 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி 2GB மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற பலன்களை விரும்பும் மக்களுக்கு, இந்த திட்டம் சிறப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 Plan With 395 Days Validity 2GB Daily Data and 100 SMS Benefits In Single Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X