BSNL.. கியூ கட்டி ரீசார்ஜ்.. மாசம் ரூ.200-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்கள் கியூ கட்டி ரீசார்ஜ் செய்யும்படி மாதத்துக்கு ரூ.200 செலவில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) கொடுப்பது மட்டுமல்லாமல், கூடவே 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கிறது. இந்த வருடாந்திர திட்டத்தின் (Annual Plan) விவரங்களை பார்க்கலாம்.
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் விஐ (Vi) நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு வருடாந்திர திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கிறது. இதில் அதிகப்படியான கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யும்படி பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம் இருக்கிறது. இதில் 12 மாதங்கள் வேலிடிட்டி வருவதால், மாத செலவு வெறும் ரூ.200 ஆக மட்டுமே இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த திட்டம் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் போஸ்ட் டேட்டா சலுகைகளை கொடுக்கிறது. வாய்ஸ் கால்களை பொறுத்தவரையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) & எஸ்டிடி (STD) கிடைக்கிறது.
மேலும், நேஷனல் ரோமிங் (National Roaming) கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெறலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆனால், அது 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, மொத்த வேலிடிட்டிக்கு போஸ்ட் டேட்டா கணக்கில்லாமல் 730 ஜிபி டேட்டா கிடைக்கும்.
அடுத்து 100 எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு கிடைக்கிறது. இந்த சலுகைகளை மட்டுமே இந்த திட்டம் கொடுக்கிறது. ஓடிடி போன்ற சலுகைகள் கொடுக்கப்படாது. 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதைவிட விட மலிவாக மற்றொரு திட்டம் உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த திட்டத்தில் வேலிடிட்டி 12 மாதங்களுக்கு கிடைக்காது. அதாவது, மொத்தமாக 330 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கிடைக்கும். ஆகவே, சிம் ஆக்டிவ் கொடுக்கப்படுகிறது.
இதில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆகவே, 330 நாட்கள் வேலிடிட்டிக்கு 495 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கொடுக்கப்படும். 100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம்.
இந்த திட்டங்கள் தினசரி டேட்டாவுடன் கிடைக்கின்றன. அதுவே லம்ப்-சம் டேட்டாவுடன் திட்டத்தை பெற்றால், மேலும் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதிலும் வாய்ல் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். டேட்டா மட்டுமே குறைவாக இருக்கும். கிட்டத்தட்ட வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும்.
பிஎஸ்என்எல் ரூ 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 300 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இந்த விலைக்கு இது அதிக வேலிடிட்டியாகவே இருக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் சலுகைகள் கிடைக்கும். மொத்த வேலிடிட்டிக்கும் 32 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.
இந்த டேட்டாவுக்கு பிறகும் முந்தைய திட்டங்களை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். லம்ப்-சம் டேட்டா திட்டத்தில் எஸ்எம்எஸ்களும் லம்ப்-சம் சலுகையில் கிடைப்பது வழக்கமாகும். ஆனால், இதில் 300 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். 300 நாட்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








