Home
News

BSNL கிங் தான்.. 425 நாள் பிளான்.. 1 வருடம் + 60 நாளுக்கு ஓஹோன்னு நன்மை.. இந்தியாவே திரும்பி பார்க்குது..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இந்தியாவில் 425 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (425 days validity plan) கொண்ட புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL prepaid plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் சிறந்த நன்மையாக 1 வருடம் + 60 நாள் வேலிடிட்டி பார்க்கப்படுகையில், இந்த திட்டத்துடன் கிடைக்கும் மற்ற நன்மைகளையும் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் BSNL பக்கம் பார்வையை திருப்பியுள்ளது. பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய 425 நாள் திட்டத்தின் விலை என்ன? இதன் நன்மைகள் என்ன என்பது இங்கே.

இந்திய மக்களுக்காக செயல்படும் நியாயமான தொலைத்தொடர்பு நிறுவனமாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) பார்க்கப்படுகிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்களான (private telecom industries) ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவங்களின் கடுமையான விலை ஏற்றத்திற்கு பிறகு, மக்களின் நண்பனாக பிஎஸ்என்எல் (BSNL) செயல்பட்டு வருகிறது.

BSNL கிங் தான்.. 425 நாள் பிளான்.. 1 வருடம் + 60 நாளுக்கு ஓஹோனு நன்மை

BSNL கிங் தான்.. 425 நாள் பிளான்.. 1 வருடம் + 60 நாளுக்கு ஓஹோன்னு நன்மை:
உண்மையை சொல்ல போனால், தனியார் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றத்திற்கு பிறகு (private telecom price hike), என்ன செய்வதென்று புரியாமல் தத்தளித்து நின்ற மக்களுக்கு மலிவு விலையில் சிறந்த நன்மைகளை வழங்கும் ஒரே நெட்வொர்க்காக பிஎஸ்என்எல் மாறியது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் அதன் சேவை வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா முழுக்க 4ஜி சேவையை (BSNL 4G) துவங்கும் வேலையை மும்முரமாக துவங்கியது. இதனால், BSNL நிறுவனத்தின் மீது மக்கள் நம்பிகை பெருகியது.

நம்பி வந்தவர்களை கைவிட மாட்டோம், அவர்களை எங்களுடனே பயணிக்க வைப்போம் என்ற உறுதியுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் 1 வருடத்திற்கு மேல் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL more than 1 year validity plan) அறிமுகம் செய்துள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் அதிகபட்சமாக 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை (365 days validity prepaid plan) வழங்கும் நேரத்தில் BSNL மட்டும் இப்போது 425 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan):
அதுவும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 365 நாட்களுக்கு வசூலிக்கும் கட்டணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் 425 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கி அசத்தியுள்ளது. இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் BSNL 2399 Plan என்ற பெயருடன் தற்போது இந்தியாவின் அணைத்து வேடங்களிலும் கிடைக்கும் படி செய்துள்ளது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan) பற்றிய முழு விபரம் இதோ.

பிஎஸ்என்எல் 2399 பிளான் (BSNL 2399 Plan) உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை 425 நாட்களுக்கும் தடையில்லாமல் வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 2GB டேட்டாவை வழங்கும் ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் BSNL தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்கி 1 வருடம் + 60 நாட்களுக்கு அதன் வாடிக்கையாளர்களை எந்தவித கவலையுமின்றி சந்தோஷமாக பார்த்துக்கொள்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 Plan With 1 Year 60 Days Benefit Of 425 Days Validity Check Total Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X