Jio, Airtel-ஐ முடித்த BSNL.. மாதம் ரூ.200 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 412 நாட்கள் வேலிடிட்டி கொடுத்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இப்போது 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையும் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியாவை (Vodafone Idea) விட மலிவாக இருப்பதால், அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. முன்பு 412 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தது. அதாவது, மொத்தமாக 412 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுத்து வந்தது. இந்த வேலிடிட்டி எந்த டெலிகாம் நிறுவனத்திலும் கிடைக்காததால், அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், இந்த சலுகைக்கு காலக்கெடு வைக்கப்பட்டது.

இது முடிந்துவிட்டதால், இப்போது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த வேலிடிட்டிக்கு கொடுக்கப்படும் சலுகைகளை மற்ற நிறுவனங்களில் பெற்று கொள்ள முடியாது. ஏனென்றால், மற்ற நிறுவனங்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை வருடம் முழுவதும் பெற ரூ.3500 மேல் ரீசார்ஜ் கட்டணம் இருக்கும்.
ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வெறும் ரூ.2399 விலைக்கு கிடைக்கிறது. இதனாலேயே 412 நாட்களுக்கு பதிலாக 365 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், அந்த திட்டத்துக்கு இருக்கும் வரவேற்பு குறையவில்லை. பிஎஸ்என்எல் ஆப் மற்றும் வெப்சைட்டில் ரீசார்ஜ் செய்யலாம். இப்போது, இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் முழு சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட வவுச்சர் (BSNL Rs 2399 Plan Voucher): ஒரு சில திட்டங்களை போல 330 நாட்கள் வேலிடிட்டி, 300 நாட்கள் வேலிடிட்டி என்று கொடுக்கப்படவில்லை. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால் ரூ.200 மட்டுமே தேவைப்படுகிறது. இதனாலேயே வரவேற்பு பெறுகிறது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 4 சலுகைகளை மட்டுமே பெற்று கொள்ள முடியும். அதாவது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் போஸ்ட் டேட்டா ஆகிய சலுகைகள் மட்டுமே கிடைக்கும். ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை போல கூடுதலாக ஓடிடி சந்தா (OTT Subscription), ஏஐ சந்தா போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது.
அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கொடுக்கப்படாது. ஆகவே, 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி(STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம்.
இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படும். ஆகவே, இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
