மொத்த தீபாவளிக்கு ஒத்த ரீசார்ஜ்.. மாசம் ரூ.200-க்கு BSNL.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!
தம்பீகளா கொஞ்சம் ஓரமா போங்க என்று சொல்லும்படி ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மாதம் ரூ.200 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை கொடுக்கிறது. இதில் ஒரு வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ஒரு வருட சிம் ஆக்டிவ் ரீசார்ஜ் குறித்த முழு விவரம் இதோ.
பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்க தொடங்கியதில் இருந்து, அந்த நிறுவனத்தின் ரீசார்ஜ் திட்டங்கள் பெஸ்ட் ரீசார்ஜ்களாக மாறி இருக்கின்றன. ஏனென்றால், பழைய விலைகளிலேயே 4ஜி திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் பிஎஸ்என்எல் ரூ.2399 ரீசார்ஜ் திட்டம், மாதத்துக்கு ரூ.200 செலவில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ், வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி (12 மாதங்கள்) கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு ரூ.200 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. வருகிற தீபாவளிக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இந்த ஒரு வருட திட்டத்தை பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி முழுவதுக்கும் 730 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும்.
ஆகவே, போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் வருடம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. இந்த விலைக்கு தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எம் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகளுடன் மற்ற டெலிகாம் நிறுவனங்களிடம் திட்டங்கள் கிடைக்காது.
இந்த திட்டத்தில் கிடைப்பதை போல டேட்டா சலுகைகள் வேண்டாம், வாய்ஸ் கால்கள் சலுகையுடன் மலிவான விலைக்கு கிடைக்கும் ஒரு வருட ரீசார்ஜ் திட்டம் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் டேட்டா தினசரிக்கு கொடுக்கப்படாது. லம்ப்-சம் சலுகையில் மொத்தமாக கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த திட்டம் முந்தைய திட்டத்தைவிட ரூ.900 விலை கம்மியாக கிடைக்கிறது. இதற்கு ஏற்ப சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, இதில் 330 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கும். இதில் கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி நாட்கள் முழுவதுக்கும் 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. எஸ்எம்எஸ் சலுகையும் அதேபோல நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கிடைக்கிறது.
இந்த திட்டங்களில் டேட்டா வேண்டுமானால், முதலாவதாக பார்த்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் மட்டும் போதும், டேட்டா சலுகை பெரிதாக வேண்டாம் என்றால், இரண்டாவதாக பார்த்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 4ஜி வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களைவிட மலிவாகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








