Home
News

BSNL விஸ்வரூபம்.. ஏப்ரலில் 4G.. மாதாந்திரம் ரூ.184 போதும்.. 395 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின், 4ஜி சேவைகள் ஏப்ரல் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் தொடங்கப்பட இருக்கும் நேரத்தில் மாதத்துக்கு ரூ.184 செலவில் 395 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டமானது, அதன் கஸ்டமர்களை வியக்க வைத்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், லோக்தூன் போன்ற கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன.

மாதம் ரூ.184 போதும்.. 395 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 790 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக 30 நாட்களுக்கான லோக்தூன் (Lokdhun) சந்தாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல பிஆர்பிடி (PRBT) சலுகையும் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 395 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதற்கான மாதாந்திர செலவானது, வெறும் ரூ.184 மட்டுமே. ஆகவே, 13 மாதங்களுக்கு எந்தவித ரீசார்ஜ் தேவைகளும் இருக்காது. ஒருவேளை கூடுதல் டேட்டா வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது.

மாதம் ரூ.184 போதும்.. 395 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

பிஎஸ்என்எல் ரூ 2999 திட்ட விவரங்கள் (BSNL Rs 2999 Plan Details): பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டங்களில் (BSNL One Year Plan) இந்த திட்டத்தில் மட்டுமே அதிகப்படியான டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா போன்ற சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 1095 ஜிபி டேட்டா சலுகையை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த 3 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கொடுக்கப்படுகிறது.

இதுபோக முந்தைய திட்டத்தை போலவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கான மாத செலவை எடுத்து கொண்டால் ரூ.249 தேவைப்படுகிறது. மேற்கூறிய 2 திட்டங்களிலும் எது பெஸ்ட் என்று பார்த்தால், முதல் திட்டம் வேலிடிட்டியிலும், 2ஆவது திட்டம் டேட்டாவிலும் அதிகப்படியான சலுகைகளை வழங்குகின்றன. ஆகவே, 2 திட்டங்களும் சலுகைகளுக்கு ஏற்ப பெஸ்டாகவே இருகின்றன.

மார்ச் 2ஆம் தேதி ராமேஸ்வரத்தில், பிஎஸ்என்எல் தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் தமிழ்மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி டவர்கள் அனைத்தும் 4ஜி டவர்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், 200க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய 4ஜி சேவை டவர்களும் நிறுவப்பட்டுள்ளன.

ஆகவே, தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும். பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தங்களது, 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டுகளை அருகில் உள்ள பிஎஸ்என்எல் சேவை மையங்கள் அல்லது சிம் மேளாக்களில் 4ஜி சிம்கார்டுகளை இலவசமாக மாற்றி கொள்ளலாம் என்று தெரிவித்தது, இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 Plan Offers 395 Days Validity Data, Unlimited Voice, 2GB Data Check One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X