மார்ச் 31 குறிச்சாச்சு.. மாதம் ரூ.199 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2.5 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருடாந்திர திட்டம் மாதத்துக்கு வெறும் ரூ.199 செலவில் கிடைக்கிறது. 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. இதில் கிடைக்கும் 2.5 ஜிபி டேட்டாவானது, போனஸ் சலுகையாக கிடைக்கிறது. இதை பெறுவதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது.
பிரதமர் மோடியின் உத்தரவுபடி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன் பிஎஸ்என்எல் நிறுனமானது 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இப்போது, 4ஜி சேவையை நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் மலிவான விலைக்கு கொடுக்கிறது. சொல்லப்போனால், 4ஜி சேவையை கொடுத்தும் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. மாறாக டேட்டாவை அதிகரித்துள்ளது.

இதில் பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டமானது, அதிகமாக வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது, 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்து வந்தது. இப்போது, 2.5 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் டேட்டா சலுகையை பெற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது.
ஆகவே, இந்த தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால், 2 ஜிபிக்கு பதிலாக நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வருடாந்திர திட்டத்தின் விலை ரூ.2399ஆக இருந்தாலும், 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு ஏற்படும் செலவை கணக்கிட்டு பார்த்தால் வெறும் ரூ.199 மட்டுமே தேவைப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (STD & Roaming Voice Calls) கொடுக்கப்படும். ஆகவே, வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கொடுக்கப்பட்டு விடுகிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு உள்ளது.
இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம். 2.5 ஜிபி டேட்டா தீர்ந்துபோன பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்துக்கு போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். இந்த டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டத்தில் அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகளை தவிர மற்ற எந்த சலுகைகளும் கொடுக்கப்படாது.
மலிவான விலைக்கு வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்வது மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டாவுக்கு இதை ஆப்ஷனில் எடுக்கலாம். தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன் 365 நாட்கள் வேலிடிட்டியானது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களில் கிடைக்காது. பிஎஸ்என்எல்லில் மட்டுமே கிடைக்கும்.
இதைவிட கூடுதல் டேட்டா வேண்டுமானால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதிலும் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். ரூ.3,000 விலைக்குள் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை வருடம் முழுவதும் கொடுக்கும் ஒரே திட்டமாகவும் இது இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 2799 திட்ட விவரங்கள் (BSNL Rs 2799 Plan Details): 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








