Home
News

நாளை கடைசி நாள்.. BSNL சூப்பர் ஆஃபர்.. 412 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதுவும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் அதிக நாட்கள் வேலிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி சலுகையை வழங்கியது. இந்த ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வழங்கப்பட்ட கூடுதல் வேலிடிட்டி சலுகை ஆனது நாளை (செப்டம்பர் 12) ஒருநாள் மட்டுமே இருக்கும். இப்போது இந்த திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாளை கடைசி நாள்.. BSNL சூப்பர் ஆஃபர்.. 412 நாட்கள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 prepaid plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. ஆனால் கடந்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த திட்டத்தில் 47 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி வழங்கப்பட்டது. எனவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் 13.5 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே இந்த இந்த திட்டத்தில் மொத்தம் 824 நாட்கள் டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டம் மூலம் கிடைக்கும்.

எனவே நீங்கள் செப்டம்பர் 12-ம் தேதிக்கு முன்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்தால் வழக்கம்போல 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. ஒருவேளை 365 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 3ஜிபி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

நாளை கடைசி நாள்.. BSNL சூப்பர் ஆஃபர்.. 412 நாட்கள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 Plan Extra Validity Offer Ends on September 12: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X