நாளை கடைசி நாள்.. BSNL சூப்பர் ஆஃபர்.. 380 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். எனவே தான் பிஎஸ்ன்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகனை பெற இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 15-க்குள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 380 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 760ஜிபி டேட்டா கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வேலிடிட்டி சலுகையானது அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15 வரை இருக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. ஒருவேளை தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் ஒரு வருட வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
