2026 ஆரம்பமே BSNL ஒரே போடு.. மாதம் ரூ.200 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு டெலிகாம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. மாதத்துக்கு ரூ.200 செலவில் 12 மாதங்கள் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் டேட்டா சலுகை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், விலை ஏற்றப்படவில்லை, டேட்டா மட்டுமே கூடுதலாகி இருக்கிறது.
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் டேட்டா சலுகையை குறைப்பது மற்றும் மலிவு விலை திட்டத்தை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டேட்டா சேவையை தொடங்கிய பிறகு டேட்டா சலுகைகளை கூடுதலாக கொடுக்க தொடங்கி இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டம், பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம், பிஎஸ்என்எல் ரூ.347 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் ரூ.225 திட்டம் ஆகியவற்றில் கிடைத்துவந்த டேட்டா அப்கிரேட் செய்யப்பட்டு, கூடுதலாக கொடுக்கப்படுகிறது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேபோல விலையும் உயர்த்தப்படவில்லை. ஆனால், ஜனவரி 31 ஆம் தேதி வரையில் மட்டுமே பெற்று கொள்ள முடியும்.
பிஎஸ்என்எல் ரூ. 2,399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): 365 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. 12 மாதங்களுக்கு சலுகைகளை கொடுப்பதால், மாத செலவு ரூ.199 ஆக மட்டுமே இருக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் (Unlimited Local, STD, Roaming) கால்கள் கிடைக்கின்றன.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. முன்னதாக இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது. இப்போது, 2.5 ஜிபி டேட்டாவாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுத்துள்ளது. பிஎஸ்என்எல் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ. 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): 72 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டது. இப்போது, இந்த டேட்டா 2.5 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): 50 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைத்து வந்தது. ஆனால், இப்போது 2.5 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதிலும் விலையில் மாற்றம் கிடையாது. மற்ற சலுகைகளை பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை கொடுக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 225 திட்ட விவரங்கள் (BSNL Rs 225 Plan Details): இந்த திட்டம் சில்வர் ஜூபிலி திட்டமாக இருக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைத்து வந்தது. இப்போது, 3 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 90 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தலாம். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








