Home
News

கேபிள் TV-ஐ முடித்த BSNL.. 500+ TV சேனல்கள் ப்ரீ.. மாதம் ரூ.185 க்கு 412 நாட்கள் வேலிடிட்டி.. 25+ ஓடிடி சந்தா!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை மட்டுமல்லாமல், கேபிள் டிவி, டிடிஎச் சேவைகளையும் தூக்கி சாப்பிடும்படி பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, சலுகைகளை கொடுத்துள்ளது. ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி, பிராட்பேண்ட் திட்டத்தின் விலை குறைப்பு, இலவச லைவ் டிவி சேனல்கள் இருக்கின்றன.

முதலில் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் வேலிடிட்டியை தெரிந்து கொள்ளலாம். பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இப்போது, 412 நாட்களாக வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கூடுதலாக 47 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டியை பெறுவதற்கு செப்டம்பர் 12ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது.

கேபிள் TV-ஐ முடித்த BSNL.. 500+ TV சேனல்கள் ப்ரீ.. மாதம் ரூ.185 க்கு!

ஆகவே, அந்த தேதிக்கு பிறகு சுதந்திர தின சலுகை முடிந்துவிடும். மறுபடியும் 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, இப்போது 13 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கிடைக்கிறது. 1 மாதத்துக்கு ஏற்படும் செலவை வகுத்து பார்த்தால் வெறும் ரூ.185 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) செய்து கொள்ளவும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளவும் முடியும்.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் 412 நாட்கள் முழுவதும் கொடுக்கிறது. மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இதை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 412 நாட்களுக்கு இந்த திட்டத்தை பெற செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ.1111 பிராட்பேண்ட் திட்ட விவரங்கள் (BSNL Rs 1111 Broadband Plan Details): சுதந்திர தினத்தை முன்னிட்டு மற்றொரு சலுகையாக இந்த பிஎஸ்என்எல் ரூ.1199 பிராட்பேண்ட்ம் கிடைக்கிறது. சொல்லப்போனால், இந்த திட்டத்தின் விலை ரூ.1199ஆக இருந்தது. இப்போது, ரூ.1111 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.88 விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 200 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் டேட்டா கொடுக்கப்படும். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கனெக்டிவிட்டி கிடைக்கும். மாதத்துக்கு 5000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 25+ ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv) உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கும். இதுபோக லைவ் டிவி சேனல்களையும் கஸ்டமர்கள் பார்த்து கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது. இதற்கு அடுத்த பிஎஸ்என்எல் செல்ப் கேர் ஆப் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இலவசமாக லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன.

ஆகவே, அப்கிரேட் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் செல்ப் கேர் ஆப் வழியாக எந்த கட்டணமும் இல்லாமல், 500 லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஆனால், இது மொபைல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். டாங்கோ டிவி (Tango TV) வழியாக இந்த லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த சலுகைகள் வருகின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 Plan 412 Days Validity BSNL Broadband Plan Rs 1111 200 Mbps Data Independence Day Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X