Home
News

ஒரே BSNL ரீசார்ஜ் ஒரு வருடம் கவலை இல்லை.. தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. விட்றாதீங்க..

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் கம்மி பட்ஜெட்டில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. விரைவில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே BSNL ரீசார்ஜ் ஒரு வருடம் கவலை இல்லை.. தினமும் 3ஜிபி டேட்டா..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில்
வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

குறிப்பாக அதிக டேட்டா மற்றும் ஒரு வருடம் வேலிடிட்டி தருவதால் இந்த திட்டங்களை நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை 330 நாட்கள் வேலிடிட்டி வேண்டும் என்றால் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இப்போது ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே BSNL ரீசார்ஜ் ஒரு வருடம் கவலை இல்லை.. தினமும் 3ஜிபி டேட்டா..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 Prepaid Plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 330 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 495ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs.2399 and Rs.2799 prepaid plans offer 365 days of validity and unlimited benefits: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X