Home
News

சலுகைகளை அள்ளி கொடுத்த பிஎஸ்என்எல்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா.. எந்த திட்டம்?

தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இதுதவிர அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை வழங்குகிறது இந்நிறுவனம். அதன்படி தற்போது கூட ஒரு வருட வேலிடிட்டி தரும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூ.2449 மற்றும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டங்களில் தான் கூடுதல் சலுகைகளை வழங்கி உள்ளது. இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சலுகைகளை அள்ளி கொடுத்த பிஎஸ்என்எல்.. 365 நாட்கள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ.2449 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2499 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆகவே இந்த பிஎஸ்என்எல் ரூ.2449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2499 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். தற்போது பிஎஸ்என்எல் ரூ.2449 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு கூடுதல் சலுகையை வழங்கி உள்ளது.

அதாவது தனிநபர் விபத்து காப்பீடு (Personal Accident Cover) மற்றும் சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் (Cyber Insurance Coverage) கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் விபத்து காப்பீடு ரூ.1 லட்சத்துக்கு மட்டுமெ செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாலை விபத்து, தீ காயம், பாம்புக்கடி, மின்னல் தாக்குதல் மற்றும் மின்சார தாக்குதல் உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ரூ.10 ஆயிரத்துக்கு கிடைக்கும் சைபர் இன்சூரன்ஸ் கவரேஜிலும் குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன.

குறிப்பாக சைபர் திருட்டு, ஃபிசிங், ஈ-மெயில் ஸ்பூஃபிங் ஆகியவற்றுக்கு பொருந்தும். இதுபோன்று சைபர் பாதிப்புக்குள்ளான 7 நாட்களில் புகார் தெரிவிக்க வேண்டும். ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்துக்கு பிறகில் இருந்தே இந்த சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் ஆக்டிவாக கருதப்படும். வருடத்துக்கு 3 முறை கிளைம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். தற்போது இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 15-க்குள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 380 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

சலுகைகளை அள்ளி கொடுத்த பிஎஸ்என்எல்.. 365 நாட்கள் வேலிடிட்டி..

எனவே பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 760ஜிபி டேட்டா கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வேலிடிட்டி சலுகையானது அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15 வரை இருக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 and Rs 2449 Prepaid Plans Offer Extra Benefits With 365 Day Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X