Home
News

BSNL-ன் 2025 ட்ரீட்.. 425 நாள் வேலிடிட்டி திட்டம்.. 1 வருடம் +2 மாதத்திற்கு ஒரே ரீசார்ஜ்.. என்ன விலை தெரியுமா?

இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited), புது வருட கொண்டாடட்டதை சிறப்பிக்கும் விதமாக, இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் நாளில் 425 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்காத நன்மையை பிஎஸ்என்எல் (BSNL) தற்போது வழங்கியுள்ளது. இந்த திட்டம் எந்த வட்டங்களில் எல்லாம் கிடைக்கும்? இதன் விலை என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டின் பாதியில் இருந்து பெரிய பாய்ச்சலில் இருக்கிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றத்திற்கு பிறகு, மக்கள் மலிவு விலை திட்டத்தை வழங்கும் பிஎஸ்என்எல் பக்கம் கூட்டம் கூட்டமாக மாறியுள்ளனர்.

BSNL-ன் 2025 ட்ரீட்.. 425 நாள் வேலிடிட்டி திட்டம்.. என்ன விலை?

BSNL-ன் 2025 ட்ரீட்.. இந்தியாவின் முதல் 425 நாள் வேலிடிட்டி திட்டம்:
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து 'மலிவு விலை.. அதிக நன்மை..' என்ற கவர்ச்சிகரமான யுக்தியை பின்பற்றி மக்களை தன் வசம் ஈர்த்து வருகிறது. இதன் விளைவாக 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், 1 கோடிக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை BSNL நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டில் பாதியில் இருந்து சிறப்பாக செயல்பட துவங்கிய பிஎஸ்என்எல், 2025 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே ராக்கெட் வேகத்தில் பாய்ந்து முழுவீச்சில் முன்னேற துவங்கியுள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் 425 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL 425 days validity plan) அறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 2398 திட்டம் (BSNL Rs 2398 Plan):
இந்தியாவில் கிடைக்கும் வழக்கமான ஒரு வருட ரீசார்ஜ் பிளானை போல் இல்லாமல் 365 நாளுடன் கூடுதலாக 60 நாள் வேலிடிட்டியை சேர்த்து வழங்கி மொத்தமாக 425 நாளுக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் இப்போது வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலையை ரூ. 2398 என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த பிஎஸ்என்எல் ரூ. 2398 திட்டம் (BSNL Rs 2398 Plan) 425 நாள் செல்லுபடியை வழங்குகிறது. இந்த செல்லுபடி காலத்தில் முழுக்க, அணைத்து நெட்வொர்க்கிற்குமான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voive calls) நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் மொத்தமாக 850GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இது தினசரி 2GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 SMS நன்மையோடு வருகிறது.

முதற்கட்டமாக இந்த திட்டம் எந்த வட்டத்தில் கிடைக்கிறது?

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது இந்த 425 நாள் செல்லுபடியாகும் திட்டத்தை முதற்கட்டமாக சில வட்டங்களில் மட்டுமே வழங்குகிறது. உதாரணமாக, இந்த பிஎஸ்என்எல் ரூ. 2398 திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் வட்டங்களில் (Jamu and Kashmir circles) தற்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. விரைவில் இந்த இந்த திட்டம் இந்தியாவில் உள்ள மற்ற டெலிகாம் வாதங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல்-ன் 2025 ஆரம்பமே நம்மை வியக்க வைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2398 Plan Offers 425 Days Validity With Total 850GB Data Benefits Check Availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X