அள்ளி தரும் BSNL.. மலிவு விலை.. தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. அசத்தலான மூன்று திட்டங்கள்..
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக மலிவு விலையில் திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அதிக நன்மைகளைத் தரும் மூன்று அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
1.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 239 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக ஒரு மாதம் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 62ஜிபி வரை டேட்டாவை பெற முடியும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ வழங்கப்படுகிறது. இதுதவிர யுசநயெ மொபைல் கேமிங் சேவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ரூ.239 திட்டத்தில் குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
2.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL RS 299 Prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். 30 நாட்கள வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் ஓடிடி நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படவில்லை.
3.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும். 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல அட்டகாசமான சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. பின்பு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிடும் இந்நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை வழங்கிவிட்டால் இன்னும் அதிக பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைவார்கள்.
photo credit: pngimg


Click it and Unblock the Notifications








