BSNL-க்கு சிங்கப்பாதை.. வெறும் ரூ.229-க்கு வருது மொத்த சலுகையும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. மாதாந்திர வேலிடிட்டி!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் மீது டெலிகாம் கஸ்டமர்களின் கவனம் சென்றுவிட்டது. 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டாலும், மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கே பிஎஸ்என்எல் திட்டங்கள் கிடைக்க இருப்பதால், இப்போது சிம் கார்டு வாங்குவது முதல் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்களில் எது பெஸ்ட் என்று ஆராய்வது வரையில் நடக்க தொடங்கிவிட்டது. இப்போது, ரூ.229 மதிப்பிலான திட்டம் கவனம்பெற்றுள்ளது.
இந்த திட்டத்தில் அதிகப்படியான டேட்டா மற்றும் வேலிடிட்டி மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளும் வருகிறது. அதாவது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போக கேமிங் பிரியர்களுக்கான அரினா மொபைல் கேமிங் சலுகையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இப்போது, முழு விவரங்களையும் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 299 திட்ட விவரங்கள் (BSNL Rs 229 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு மாதாந்திர சலுகை கிடைப்பதால், அதிபட்சம் 64 ஜிபி டேட்டா வரையில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. தினசரி டேட்டா வருவதால், போஸ்ட் டேட்டா சலுகை வருகிறது.
ஆகவே, மலிவான விலையிலும் மாதம் முழுவதும் அதிகப்படியான டேட்டாவை பெற்று கொள்ள முடிகிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் செய்து கொள்ளலாம். இதுபோக வழக்கமாக கிடைக்கும் சலுகையான அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம்.
இந்த சலுகைகள் போக அரினா மொபைல் கேமிங் ( Arena Mobile Gaming) சலுகையை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் மாதாந்திர வேலிடிட்டி கிடைப்பதால், ஒரு மாதத்தில் எந்த தேதியில் ரீசார்ஜ் செய்தாலும், அடுத்த மாதம் அதே தேதி வரையில் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதைவிட மலிவான விலையில் அதிகப்படியான வேலிடிட்டி கொண்ட மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், அந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கிடையாது. இருப்பினும், தேவைக்கேற்ப வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. அதேபோல டேட்டா சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ 107 விலையில் கிடைக்கிறது. இருப்பினும், 35 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மலிவான விலையில் சலுகைகள் மட்டுமல்லாமல், சிம் ஆக்டிவ் சலுகையையும் பெற்று கொள்ள முடிகிறது. இந்த வேலிடிட்டி மட்டுமல்லாமல், 200 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள் சலுகைகளை இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஆகவே, 200 நிமிடங்களுக்கு லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இதுபோக டேட்டா சலுகையும் கிடைக்கிறது. 3 ஜிபி லம்ப்-சம் டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவுக்கு பிறகு கட்டணங்கள் வசூலிக்கப்படும். இருப்பினும், 35 நாட்கள் வரையில் வேலிடிட்டி கொடுக்கப்படும்.
ஆகவே, மிகவும் மலிவான விலையில் அதிக நாட்களுக்கு சிம் ஆக்டிவாக இருக்க வேண்டும் அல்லது விலையை விட கூடுதல் சலுகைகள் வேண்டும் என்று கேட்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களும் பக்காவான தேர்வாக இருக்கும். இதுபோன்ற டெலிகாம் செய்திகளுக்கு கிஸ்பாட் தளத்தை பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








