Home
News

முடியலடா சாமி.. ரூ.229-க்கு Jio, Airtel-ஐ ஓரங்கட்டிய BSNL.. மொத்த ரீசார்ஜ் இதுக்கு தான்.. வாய்ஸ், டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் கஸ்டமர்கள் இந்த பிஎஸ்என்எல் (BSNL) திட்டத்தை பார்த்தால், நம்ப முடியலடா சாமி என்று முக்கில் விரல் வைக்கும்படி ரூ.229 விலையிலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Prepaid Recharge) இருக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (Daily Data) சலுகைகள் கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி என்ன? மற்ற நிறுவனங்களில் இந்த சலுகைகள் என்ன விலைக்கு கிடைக்கின்றன? முழு விவரங்களை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.229 திட்ட விவரங்கள் (BSNL Rs 229 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. இதுபோக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் (National Roaming Voice Calls) கிடைக்கிறது.

முடியலடா சாமி.. ரூ.229-க்கு Jio, Airtel-ஐ ஓரங்கட்டிய BSNL.. வாய்ஸ்!

இந்த திட்டத்தில் கிடைக்கும் 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் இந்த 2 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளையே பிஎஸ்என்எல் ரூ.229 திட்டம் கொடுக்கிறது. ஜியோவில் இதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1 மாதத்துக்கு வேலிடிட்டி வேண்டுமானால், ரூ.349 விலை கொண்ட திட்டத்துக்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனால், இதில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் விலைக்கு ஏற்ப இருக்கும். ஆனால், மலிவாக பார்க்கையில் பிஎஸ்என்எல் முந்துகிறது.

ஜியோ ரூ.349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும். அதேபோல இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. இந்த சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. இது விலை அதிகமாக இருப்பதால், சலுகைகளை வாரி வழங்குகிறது. இதில் 5ஜி டேட்டா கூடுதலாக இருக்கிறது.

ஆனால், 4ஜி சேவையை பெறும் கஸ்டமர்களிடையே ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் திட்டம் இதை தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது. ஏனென்றால், ரூ.100-க்கும் மேல் விலை கம்மியாக இந்த திட்டம் கிடைக்கிறது. இதில் கூடுதல் வேலிடிட்டி கொடுக்கிறது. இப்போது, ஏர்டெல்லில் கிடைக்கும் 2 ஜிபி டேட்டா திட்டத்தை இந்த பிஎஸ்என்எல் திட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.398 திட்ட விவரங்கள் (Airtel Rs 398 Plan Details): இந்த திட்டத்திலும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. கூடுதலாக இதில் ஓடிடி சந்தா இருக்கிறது.

ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கூடுதல் சலுகைகளானது, விலைக்கு ஏற்பவே இருக்கின்றன. இதிலும் பிஎஸ்என்எல் முந்துகிறது. இந்த மூன்று திட்டங்களும் 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் போட்டியிடக் கூடியதாகும். பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்காத பகுதிகளில் மட்டும் ஜியோ, ஏர்டெல் டேட்டா வேகத்தில் மட்டும் முந்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 229 Plan With Unlimited Voice 2GB Data 1 Month Validity Check Jio Airtel Competition Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X