முடிச்சு விட்ட BSNL.. இனி 28 நாட்கள் இல்ல.. 30 நாட்கள் இல்ல.. ரூ.229-க்கு காலண்டர் மாத வேலிடிட்டி.. என்னென்ன?
டெலிகாம் நிறுவனங்களை பொறுத்தவரை 28 நாட்கள் என்றாலே ஒரு மாத கணக்குத்தான். அதனடிப்படையிலேயே ப்ரீபெய்ட் திட்டங்கள் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், 30 நாட்கள் மற்றும் காலண்டர் மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களும் கிடைக்கின்றன. இதில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மற்ற நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படி அடிமட்ட விலைக்கு ஒரு திட்டத்தை கொடுக்கிறது. இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் வாய்ஸ் கால்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், இதில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்திட்டத்தின் விவரங்கள் இதோ.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களில் மாதாந்திர வேலிடிட்டியில் தினசரி டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் வேண்டுமானால், அந்த திட்டத்தின் விலை ரூ.300-க்கும் மேல் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது வெறும் ரூ.229 விலை கொண்ட திட்டத்தில் அந்த சலுகையை கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 229 திட்ட விவரங்கள் (BSNL Rs 229 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) காலண்டர் மாத வேலிடிட்டி கொடுக்கும். ஆகவே, எந்த தேதியில் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்கிறார்களோ அடுத்த மாதம் அதே தேதி வரையில் சலுகைகள் கொடுக்கப்படும். இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கிறது.
அதேபோல போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு காலண்டர் மாத வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்கள் (National Roaming Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இது தினசரி டேட்டா சலுகையாக இருப்பதால், அந்த நாளில் 2 ஜிபி டேட்டாவை முடித்துவிட்டால், அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, வாய்ஸ் கால்களை போலவே டேட்டாவும் தடையில்லாமல் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் எஸ்எம்எஸ் சலுகையும் இதற்கு கிடைக்கிறது.
நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகைகளையே இந்த திட்டம் கொடுக்கிறது. சொல்லப்போனால், இந்த விலைக்கு இது நல்ல லாபம் தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது. ஒருவேளை காலண்டர் மாத வேலிடிட்டி வேண்டாம், 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும்பட்சத்தில்,
அதற்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டத்தை வைத்திருக்கிறது. இந்த திட்டம் விலையிலும் மலிவாக கிடைக்கிறது. ஆனால், டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை முந்தைய திட்டத்தை போலவே கொடுத்து இருக்கிறது. இந்த 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் லம்ப்-சம் டேட்டா சலுகைகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகையும், அந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி இருப்பதால், 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
இதேபோல மற்ற சலுகைகளும் முந்தைய திட்டத்தை போலவே அப்படியே இருக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை தினமும் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் எந்த திட்டம் உங்களது தேவைக்கு ஏற்ப இருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்து ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








