Home
News

BSNL சிம் இருக்குல.. ரூ.229-க்கு நச்சுனு முடிஞ்சு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. மாத வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் சிம் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இனிமேல் குஷியாகத்தான் இருக்கப்போகிறது. ஏனென்றால், நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் மலிவான விலைக்கு அதிக டேட்டா கிடைக்கும் திட்டங்களின் பக்கம் கஸ்டமர்களின் கவனம் சென்றுள்ளது. இவர்கள் பிஎஸ்என்எல் ரூ.229 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு மாதத்துக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு குறையிருக்காது.

மற்ற நிறுவனங்களில் மாத வேலிடிட்டி என்றாலே, 28 நாட்கள் மட்டுமே கணக்காக இருக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் காலண்டர் மாத வேலிடிட்டி இருந்தாலும் அதிக விலைக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் 28 நாட்கள் திட்டங்களே அதிகமாக ஆப்ஷனில் கிடைக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல்லில் 28 நாட்கள் திட்டத்தை அதிகமாக பார்க்க முடியாது.

BSNL சிம் இருக்குல.. ரூ.229-க்கு  நச்சுனு முடிஞ்சு.. அன்லிமிடெட் கால்!

அப்படி இருந்தாலும், அடிமட்ட விலைக்கு மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல காலண்டர் மாத வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்களும் மலிவான விலைக்கு அதிகமாக கிடைக்கின்றன. இதில் பிஎஸ்என்எல் ரூ.229 திட்டத்தில் கிடைக்கும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மலிவாக கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 229 திட்ட விவரங்கள் (BSNL Rs 229 Plan Details): இந்த திட்டத்தில் 30 நாட்கள் மற்றும் அதற்கு மேல் 1 நாளும் வேலிடிட்டி பெற்று கொள்ள முடியும். அதாவது, இதுவொரு காலண்டர் மாத வேலிடிட்டி (Calendar Month Validity) திட்டமாக இருக்கிறது. ஆகவே, நீங்கள் ஒரு மாதத்தில் எந்த தேதியில் ரீசார்ஜ் செய்கிறீர்களோ அடுத்த மாதம் அதே தேதி வரையில் வேலிடிட்டி கிடைக்கும்.

ஆகவே, 31 நாட்களை கொண்ட மாதத்தில் ரீசார்ஜ் செய்தால், அதே நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த காலண்டர் மாத வேலிடிட்டி முழுவதும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் (Unlimited Local Voice), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்கள் (National Roaming Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. இதில் தினசரி டேட்டா கிடைக்கிறது.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் பேர் யூசேஜ் பாலிசி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, 30 நாட்கள் வேலிடிட்டி பெறும்பட்சத்தில் 60 ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல 31 நாட்கள் வேலிடிட்டி பெற்றால், 62 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். தினசரி எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.

ஆகவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அனுப்பிக் கொள்ளலாம். இந்த சலுகைகளையே இந்த பிஎஸ்என்எல் ரூ.229 திட்டம் கொடுக்கிறது. இப்போது, பெரும்பாலான பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்க தொடங்கிவிட்டன. இதனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை தாராளமாக ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.

ஆனால், இதைவிட மலிவான விலைக்கு அதிக டேட்டாவுடன் ஒரு திட்டம் கிடைக்கிறது. ஆனால், இதில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.225 திட்ட விவரங்கள்: இந்த திட்டம் புதிதாக அறிமுகமான திட்டமாகும். இதில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 229 Plan With Calendar Month Validity Unlimited Voice Calls 2GB Daily Data Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X