இறங்கி அடிச்ச BSNL.. மலிவு விலை.. தினமும் 2GB டேட்டா.. 45 நாள் வேலிடிட்டி.. இந்த 2 திட்டங்களை விட்டுறாதீங்க!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். சில மாதங்களுக்கு முன்பு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டத்தை உயர்த்திய போது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை.
இப்போது கூட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். மேலும் கடந்த சில மாதங்களில் அதிக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இதற்கு காரணம் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் கட்டண உயர்வு தான். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.229 மற்றும் ரூ.249 விலைகளில் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதாவது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 2ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுக்க ரூ.350-க்கு மேல் வசூல் செய்கின்றன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி கொடுத்துள்ளது. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.229 மற்றும்ரூ.249 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 229 Prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ரூ.229 திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அரினா கேம்ஸ் (Arena Games) சேவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என நிறுவனம் கூறியுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவியுள்ளதாகத் தெரிவித்தது. அவற்றில் 41,000க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட புதிய 4ஜி தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியானது. குறிப்பாக அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credit: Wikipedia


Click it and Unblock the Notifications