Home
News

BSNL பயனர்களே என்ஜாய்! கம்மி விலையில் 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம்.!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக கம்மி விலையில் அசத்தலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை

பிஎஸ்என்எல் 4ஜி சேவை

அதேபோல் இந்நிறுவனம் 4ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை இப்போதுஅறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம்

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.228 மற்றும் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டங்களை தான் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 80kbps ஆக குறையும்.

Arena மொபைல் கேமிங்

இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2022 ஜூலை 1-ம் தேதி முதல் இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில்ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 80kbps ஆக குறையும்.

கேமிங் நன்மை

இதுதவிர கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது இந்நிறுவனம். இப்போது அந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 50 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் 200 நிமிடங்கள் இலவசஅழைப்பு நன்மைகள் உள்ளது. இதுதவிர 3ஜிபி டேட்டா, 50 நாட்களுக்கு பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் அணுகலும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் பிளான்.

ஏர்டெல் நிறுவனமும்

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது அருமையான திட்டங்களை ஏர்டெல் நிறுவனமும் கொண்டுவருகிறது. ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது. இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு அருமையான ப்ரீபெய்ட் திட்டத்தைப் பார்ப்போம்.

 ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் பிளான்

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் பிளான்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல்சந்தாவின் மூன்றுமாதங்களுக்கு அணுகல், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்புஇந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 228 and Rs 239 Prepaid Plans Launched: Full Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X