Home
News

Jio, Airtel-ஐ கதறவிடும் BSNL-ன் சில்வர் ஜூப்லி பிளான்.. ரூ.200 பட்ஜெட்டில் டெய்லி 2.5GB, வாய்ஸ், எஸ்எம்எஸ்!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது அதன் 25 ஆம் ஆண்டு (சில்வர் ஜூப்லி) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக.. 2500ஜிபி டேட்டா, 600 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை வழங்கும் சில்வர் ஜூப்லி எப்டிடிஎச் பிளானை அறிவித்த கையோடு.. பட்ஜெட் வாசிகளுக்காக ரூ.200 பட்ஜெட்டில் இன்னொரு சில்வர் ஜூப்லி ப்ரீபெய்ட் பிளானையும் அறிவித்துள்ளது

அது ரூ.225 மதிப்புள்ள சில்வர் ஜூப்லி ஸ்பெஷல் பிளான் (BSNL Rs 225 Silver Jubilee Special Plan) ஆகும். ரூ.225 திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) டெய்லி 2.5ஜிபி டேட்டா ( Daily 2.5GB Data), தினமும் 100 இலவசஎஸ்எம்எஸ்கள் (SMS) ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

BSNL-ன் சில்வர் ஜூப்லி பிளான்.. ரூ.200 பட்ஜெட்டில் டெய்லி 2.5GB!

இந்த இடத்தில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய 2 தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே இவ்வளவு மலிவான விலைக்கு (ரூ.230-க்குள்) டெய்லி 2.5ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களை கொண்டிருக்கவில்லை. 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி கொண்ட ஜியோவின் டெய்லி 2.5ஜிபி டேட்டா பிளானின் விலை ரூ.399 ஆகும் மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும் ஏர்டெல்லின் டெய்லி 2.5ஜிபி டேட்டா பிளானின் விலை ரூ.429 ஆகும்.

ஆக வெளிப்படையாகவே பிஎஸ்என்எல்-ன் ரூ.225 மதிப்புள்ள சில்வர் ஜூப்லி ஸ்பெஷல் பிளான் ஆனது ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டையும் "நன்மைகள்" அடிப்படையில் தூக்கி சாப்பிடுகிறது. ஆனால் இண்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) மற்றும் நெட்வொர்க் வலிமை (Network Strength) ஆகிய விஷயங்கள் - வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளை பொறுத்தது.

பிஎஸ்என்எல்லின் சில்வர் ஜூப்லி எப்டிடிஎச் திட்டத்தின் விவரங்கள்: எக்ஸ் தளம் வழியாக பிஎஸ்என்எல் இந்தியா (BSNL India) பக்கம் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, பிஎஸ்என்எல் தனது 25வது ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் நோக்கத்தின் கீழ் ரூ.625 மதிப்புள்ள திட்டத்தை அறிவித்து உள்ளது.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும். இதன் கீழ் 2500 ஜிபி அதிவேக டேட்டா (75 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீட்) வழங்கப்படும். மேலும் 600 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் (600+ Live TV Channels) மற்றும் 127 பிரீமியம் சேனல்களுக்கான (Premium TV Channels) அணுகலும் கிடைக்கும்

கூடுதலாக, சோனி லைவ் (Sony Liv) மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும். கடைசியாக இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களும் கிடைக்கும். எஸ்எம்எஸ் நன்மைகள் குறித்த விவரங்கள் எக்ஸ் தள பதிவில் குறிப்பிடப்படாவில்லை. பிஎஸ்என்எல் வலைத்தளம் அல்லது ஆப் (BSNL Website or App) வழியாக ரீசார்ஜ் செய்யும் போது சரிபார்க்கும்படி பரிந்துரைக்கிறோம்.

ரூ.225 மற்றும் ரூ.225 ஆகிய திட்டங்கள் ஒருபக்கம் இருக்க, தீபாவளி பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்ட சில சலுகைகளும் இன்னும் அணுக கிடைக்கின்றன. அதில் மிகவும் முக்கியமான சலுகை - ரூ.1 4ஜி பிளான் (BSNL Rs.1 4G Plan) ஆகும். இது நவம்பர் 15 ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

"தீபாவளி போனான்ஸா" என்று அழைக்கப்படும் பிஎஸ்என்எல் ரூ.1 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது இது வெறும் ரூ.1 க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டை பெறுவதற்கான ஒரு விளம்பர சலுகையாகும். குறிப்பிட்ட 30 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 225 Silver Jubilee Special Plan With 30 Days Validity Check Out Data Voice SMS Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X