ஒரே பிஎஸ்என்எல் ரீசார்ஜ்.. மலிவு விலை.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 30 நாட்கள் வேலிடிட்டி..
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்ய உள்ளது.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி உள்ளது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.225 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் மற்றும் வேலிடிட்டி எத்தனை நாட்கள் என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 prepaid plan) ஆனது தற்போது தினமும் 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 75ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.
மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம். அதுவும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இதுபோன்று கம்மி விலையில் திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குவதில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் 30 நாட்களுக்கு அதிக டேட்டா நன்மையை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் இந்நிறுவனம் வைத்துள்ள சில பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 100ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 144ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications